அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரக்கோணத்தை உள்ளடக்கி சென்னை நகரம் விரிவாக்கம்

Added : செப் 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி வெளிட்ட அறிவிப்புகள்:* சென்னை பாடிக்குப்பத்தில் 62.7 கோடி ரூபாய்; அயனாவரத்தில் 86.3 கோடி ரூபாய்; ஈரோடு மாவட்டம், சம்பத் நகர் மற்றும் பெரியார் நகரில் 40.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்* அம்பத்துாரில் 8.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 151 மனைகள்; ஆவடியில் 1.74 கோடியில், 45 மனைகள்;

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி வெளிட்ட அறிவிப்புகள்:

* சென்னை பாடிக்குப்பத்தில் 62.7 கோடி ரூபாய்; அயனாவரத்தில் 86.3 கோடி ரூபாய்; ஈரோடு மாவட்டம், சம்பத் நகர் மற்றும் பெரியார் நகரில் 40.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்

* அம்பத்துாரில் 8.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 151 மனைகள்; ஆவடியில் 1.74 கோடியில், 45 மனைகள்; சோழிங்கநல்லுாரில் 4.75 கோடியில், 117 மனைகள். வேலுார், குடியாத்தத்தில் 8.50 கோடியில், 306 மனைகள்; சேலம், ஆத்துாரில் 4 கோடியில், 82 மனைகள்; கிருஷ்ணகிரி, ஓசூரில் 4 கோடியில், 54 மனைகள்; மதுரை, தத்தநேரியில் 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 119 மனைகள் மேம்படுத்தப்படும்

* கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 25 கோடி ரூபாய்; மதுரை மாவட்டம், தோப்பூரில் 23.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வணிக வளாகங்கள் கட்டப்படும்

* சென்னை, லாயிட்ஸ் காலனியில் உள்ள குடியிப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு மேம்பாடு செய்யப்படும் வீட்டுவசதி வாரிய கட்டடங்களின் உறுதி தன்மையும், தொழில்நுட்பமும், மூன்றாம் தரப்பு கண்காணிப்பு குழு வாயிலாக தணிக்கை செய்யப்படும்

* பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவுகளில், வீடு வாங்குவோருக்கு மீண்டும் தவணை முறை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

* செங்கல்பட்டு மாவட்டம், மடிப்பாக்கம், கார்த்திகேயபுரத்தில் உள்ள கூட்டுறவு சமூக நலக்கூடம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்

* சோளிங்கர், வடலுார், திருக்கோவிலுார், கூடலுார் நகரங்களுக்கு, 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்படும்

* திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகள், அரக்கோணத்தை உள்ளடக்கி, சென்னை பெருநகர பகுதியை விரிவாக்குதல் குறித்து, பொது மக்களிடம் கருத்து கேட்கப்படும்

* மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையை ஒட்டிய 770 ஏக்கர் நிலத்தில், ஒருங்கிணைந்த குடியிருப்பு நகரம், தோட்டக்கலை பூங்கா, அவசர சிகிச்சை மையம், தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகள். மாநாடு அரங்கம், சேமிப்பு கிடங்கு வளாகம் அமைத்தல் போன்ற திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து செயல்படுத்தப்படும்

* சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில், போக்குவரத்து மேலாண்மை, குப்பை அகற்றுதல், திடக்கழிவு ேலாண்மை பணிகள், 20 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்

* பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில், கண்ணகி நகருக்கும், ஈஞ்சம்பாக்கத்திற்கும் இடையே, சாலையை அகலப்படுத்தி, பக்கிங்ஹாம் கால்வாய் மீது 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-செப்-202116:02:51 IST Report Abuse
Bhaskaran எல்லாம் அறிவிப்புகளோடு நின்று விட கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X