பொது செய்தி

தமிழ்நாடு

இந்து மதம் திரும்புவோருக்கு வசதியாக சிறப்பு அலுவலர்கள் இ.ம.க.,தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Added : செப் 01, 2021
Share
Advertisement
கோவை:தலித்கிறிஸ்தவர்கள் தீண்டாமை கொமைக்கு ஆளாகி தாய்மதமான இந்துமதத்திற்கு திரும்பவிளைகின்றனர். அவர்களுக்கென்று ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் சிறப்பு அலுவலர்களை நியமித்து சான்று வழங்கி அவர்களை நம் மதத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று இ.ம.க. வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இ.ம.க. தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:தமிழகத்தில் தலித் கிறிஸ்தவர்கள் தீண்டாமை

கோவை:தலித்கிறிஸ்தவர்கள் தீண்டாமை கொமைக்கு ஆளாகி தாய்மதமான இந்துமதத்திற்கு திரும்பவிளைகின்றனர். அவர்களுக்கென்று ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் சிறப்பு அலுவலர்களை நியமித்து சான்று வழங்கி அவர்களை நம் மதத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று இ.ம.க. வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இ.ம.க. தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:தமிழகத்தில் தலித் கிறிஸ்தவர்கள் தீண்டாமை இழிவுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அவர்களில் பலர் தாய்ச் சமயம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் மீதி உள்ள கிறித்தவர்களையும் அணுகி அவர்களோடு பேசி இந்து சமயத்திற்கு திரும்ப அழைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை இ. ம. க. செய்து வருகிறது.

தமிழக முதல்வர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர், நம்முடைய திருக்கோவில்களில் இந்து சமயத்திற்கு தாய்ச் சமயம் திரும்பி வருகின்றவர்களை அரவணைத்துக் கொள்ளும் வகையில் நமது கோவில்களிலேயே சுத்தி சடங்குகளை நடத்தி அவர்களுக்கு உரிய தாய்ச் சமயம் திரும்பும் சான்றிதழை வழங்கிட வேண்டும்.இதற்காக ஹிந்து சமய அறநிலையத் துறை மூலம் கோவில்கள் தோறும் சிறப்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.

இந்து சமயம் குறித்து பிரசாரம் செய்வதற்கும் இந்து சமயத்திற்கு திரும்பும் அவர்களை தாய் சமயத்தில் சேர்த்துக் கொள்ளவும் திருக்கோவில் நிர்வாகங்கள் முயற்சி எடுத்திட வேண்டும். இதற்கான முழு செலவுகளையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். சான்றிதழ்களையும் அரசாங்கம் வழங்கிட வேண்டும். இதற்கான கோரிக்கை தமிழக அரசிடம் கோரிக்கை மனுவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை கோவில் இணை ஆணையரிடம் கோரிக்கை மனு இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X