அரசியல் செய்தி

தமிழ்நாடு

அண்ணா சாலையில் கருணாநிதி சிலை

Added : செப் 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தி.மு.க., - நீலமேகம்: சென்னை அண்ணா சாலையில், கருணாநிதி சிலை அமைக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின்: ஈ.வெ.ரா., எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், தி.க., சார்பில், சென்னை, அண்ணா சாலையில், கருணாநிதி உருவ சிலையை அமைக்க வேண்டும் என்பதற்காக, குழு அமைக்கப்பட்டது. முறையாக அனுமதி பெற்று, அந்த சிலை வைக்கப்பட்டது. ஆனால், அந்த சிலை ஏன் அங்கிருந்து அகற்றப்பட்டது என்பது, உங்களுக்கெல்லாம் நன்றாகத்

தி.மு.க., - நீலமேகம்:
சென்னை அண்ணா சாலையில், கருணாநிதி சிலை அமைக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்:

ஈ.வெ.ரா., எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், தி.க., சார்பில், சென்னை, அண்ணா சாலையில், கருணாநிதி உருவ சிலையை அமைக்க வேண்டும் என்பதற்காக, குழு அமைக்கப்பட்டது.

முறையாக அனுமதி பெற்று, அந்த சிலை வைக்கப்பட்டது. ஆனால், அந்த சிலை ஏன் அங்கிருந்து அகற்றப்பட்டது என்பது, உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இரண்டு, மூன்று நாட்களுக்கு முன், தி.க., தலைவர் வீரமணி, என்னை சந்தித்தார். அவரும் இந்த கோரிக்கையை, என்னிடம் எடுத்து வைத்திருக்கிறார். பொது இடங்களில், போக்குவரத்துக்கு இடையூறாக, இது போன்று சிலைகள் வைக்கப்படக் கூடாது என்று நீதிமன்றத்தால், தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்தும், அந்த சட்ட சிக்கல்கள் பற்றியும் எடுத்து சொல்லிஇருக்கிறேன்.
'நாங்கள் ஏற்கனவே அனுமதி வாங்கியது தான். எனவே, புதிதாக அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை' என்று அவர் சொன்னார். எனவே, அதை வைக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.அதுமட்டுமல்ல. அண்ணா சாலையில், ஈ.வெ.ரா., சிலை, அண்ணாதுரை சிலை, எம்.ஜி.ஆர்., சிலை இருக்கிறது. கருணாநிதி சிலையும் இருந்தது. எனவே, அந்த இடத்திலே வைக்க வேண்டும் என்று, வற்புறுத்தி இருக்கிறார்.

அண்ணா சாலையில் வைப்பது குறித்து, சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை செய்வது உகந்ததாக இருக்கும். நீதிமன்றம் பிறப்பித்திருக்கிற உத்தரவிற்கும், நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். நிச்சயமாக கருணாநிதி சிலை, அண்ணா சாலையில் வைக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanban - Kajang,மலேஷியா
02-செப்-202107:34:08 IST Report Abuse
Nanban அண்ணா சாலையில் வேண்டாம் கருணாநிதியின் சிலை இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும் பயண சீட்டுக்கு மேல் இசட் குறியுடன் அமைக்க பட வேண்டும் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X