பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் கலெக்டர் ஆய்வு

Added : செப் 01, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார். அப்போது, அலுவலகத்தில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறாதா எனவும், ஒவ்வொரு அலுவலரும் தனித்தனியாக பதிவேடுகள் பராமரிப்பதை ஆய்வு செய்து, மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார். அப்போது, அலுவலகத்தில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறாதா எனவும், ஒவ்வொரு அலுவலரும் தனித்தனியாக பதிவேடுகள் பராமரிப்பதை ஆய்வு செய்து, மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, தாசில்தார் பார்வதி, தலைமை ஆசிரியர் பழனிசாமி, வி.ஏ.ஓ., பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X