பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாவட்ட சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில், தமிழக அரசை கண்டித்து, கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். இதில், சமூக நீதி அடிப்படையில் டி.ஏ., வழங்கப்படும் என்ற, நீதிக்கு புறம்பான தமிழக அரசின் நிலைபாட்டை கண்டிகிறோம். மேலும், கடந்த ஜூன் மாதம் முதல், மத்திய அரசு வழங்கியது போல், தமிழக அரசும் டி.ஏ.,

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாவட்ட சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில், தமிழக அரசை கண்டித்து, கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். இதில், சமூக நீதி அடிப்படையில் டி.ஏ., வழங்கப்படும் என்ற, நீதிக்கு புறம்பான தமிழக அரசின் நிலைபாட்டை கண்டிகிறோம். மேலும், கடந்த ஜூன் மாதம் முதல், மத்திய அரசு வழங்கியது போல், தமிழக அரசும் டி.ஏ., வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணிபுரிந்தனர். இதேபோல், தர்மபுரி கலெக்டர் அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை, கரூவூலம் மற்றும் மருத்துவத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இப்போராட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X