அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரணம் கீதா ஜீவன் விளக்கம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
தி.மு.க., - நீலமேகம்: ஆண் குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோருக்கும், முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாக்க, அரசு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய்; ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 96 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது.அதேநேரம், கொரோனா

தி.மு.க., - நீலமேகம்:

ஆண் குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோருக்கும், முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாக்க, அரசு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய்; ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 96 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொரோனா இறப்பு சான்றிதழில், 'பாசிட்டிவ்' என்று இருந்தால், உதவி வழங்கப்படுகிறது. 'சஸ்பெக்ட்' என, சந்தேகம் தெரிவித்திருந்தால் வழங்கப்படுவது இல்லை. ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில், கொரோனா உறுதிப்படுத்தல் மட்டும் ஏற்கப்படுகிறது. சி.டி., 'ஸ்கேன்' பரிசோதனையில், பாசிட்டிவ் என்று வந்தால், சஸ்பெக்ட் என கூறி, உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.

அமைச்சர் கீதா ஜீவன்:

ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை, சி.டி., ஸ்கேன் பரிசோதனையில், பாசிட்டிவ் என இருந்தாலும், மருத்துவமனையில் நோய் அறிகுறியுடன் இருந்ததாக சான்றிதழ் வழங்கினாலும், இந்த திட்டத்தில் பயன் பெறலாம். அவ்வாறு பலன் கிடைக்காமல் இருந்தால், மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் கொடுங்கள். உடனடியாக பரிசீலித்து, உதவிகள் வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X