பொது செய்தி

தமிழ்நாடு

பத்திர பதிவுக்கான தடையை நீக்க மனு

Added : செப் 01, 2021
Share
Advertisement
தர்மபுரி: அன்னசாகரத்தை சேர்ந்த மக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாரத்தில், 340க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், பல ஆண்டுகளாக வசிக்கிறோம். எங்களது குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு மற்றும் அரசு நிதியுதவி திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான பட்டா உள்ளிட்ட அனைத்து

தர்மபுரி: அன்னசாகரத்தை சேர்ந்த மக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாரத்தில், 340க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், பல ஆண்டுகளாக வசிக்கிறோம். எங்களது குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு மற்றும் அரசு நிதியுதவி திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. இந்நிலையில், நாங்கள் வசிக்குமிடம் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது எனக்கூறி, தற்போது பத்திரப்பதிவு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனைத்து ஆவணங்களையும் அளித்துள்ளோம். இருப்பினும் தடை தொடர்கிறது. எனவே, எங்களது குடியிருப்புகளை பத்திரப்பதிவு செய்ய விதித்த தடையை நீக்க நடவடிக்கை வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X