பொது செய்தி

இந்தியா

125 ரூபாய் சிறப்பு நாணயம்: இஸ்கான் நிறுவனரின் நினைவாக பிரதமர் வெளியீடு

Updated : செப் 01, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புது டில்லி: இஸ்கான் அமைப்பின் நிறுவனரான ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை இன்று பிரதமர் மோடி வெளியிட்டார். சுவாமி பிரபுபாதா கிருஷ்ணருக்கான சர்வதேச தொண்டு அமைப்பை ஏற்படுத்தினார். இஸ்கான் என்றும், ஹரே கிருஷ்ணா இயக்கம் என்றும் அது அறியப்படுகிறது. இவ்வமைப்பு பகவத் கீதை மற்றும் பல வேத இலக்கியங்களை 89

புது டில்லி: இஸ்கான் அமைப்பின் நிறுவனரான ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை இன்று பிரதமர் மோடி வெளியிட்டார்.



latest tamil news



சுவாமி பிரபுபாதா கிருஷ்ணருக்கான சர்வதேச தொண்டு அமைப்பை ஏற்படுத்தினார். இஸ்கான் என்றும், ஹரே கிருஷ்ணா இயக்கம் என்றும் அது அறியப்படுகிறது. இவ்வமைப்பு பகவத் கீதை மற்றும் பல வேத இலக்கியங்களை 89 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளது. வேத இலக்கியத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் சிறப்பான பங்கை வகிக்கிறது. மேலும், சுவாமி பிரபுபாதா நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை நிறுவியுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார். 1977-ல் உ.பி.,யில் தனது 82-வது வயதில் இறந்தார்.


latest tamil news



1896 செப்டம்பர் முதல் தேதியில் பிறந்த அவருக்கு இன்று 125-ஆவது பிறந்த தினமாகும். அதனை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று காணொளி காட்சி மூலமாக 125 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். ஹரே கிருஷ்ணா என்று கூறி தனது உரையை தொடங்கினார் பிரதமர். இந்நிகழ்ச்சியில் இஸ்கான் அமைப்பின் தலைவர் கோபால கிருஷ்ண கோசுவாமி மஹாராஜ் மற்றும் இஸ்கான் கோயில்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
01-செப்-202123:23:34 IST Report Abuse
vivek c mani உலகெங்கும் பகவத் கீதையின் பெருமையை பரப்பி நன்னெறிகளுடன் மக்கள் வாழ வழி வகுத்தவர் சுவாமி பிரபு பாதா . வெளிநாட்டு மக்கள் இந்திய கலாச்சாரத்தை நன்கு புரிந்து கொள்ள முயற்சிகள் எடுத்து வெற்றி பெற்றவர்.மற்றும் பல ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்யும் நிறுவனமாகவும் விளங்குகிறது இஸ்கான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X