பொது செய்தி

இந்தியா

'கூகுள்' தேடுபொறியில் தடுப்பூசி மைய விபரம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:இந்தியாவில், கொரோனா தடுப்பூசி மையங்கள், கையிருப்பில் உள்ள தடுப்பூசி மருந்துகள் ஆகியவற்றை சுலபமாக அறிந்து கொள்ளும் வசதியை, 'கூகுள்' தேடுபொறி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் 'கோவின்' எனப்படும் மொபைல்போன் செயலியில், கொரோனா தடுப்பூசி மையங்கள், தடுப்பூசி பதிவு, தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கூகுள்

புதுடில்லி:இந்தியாவில், கொரோனா தடுப்பூசி மையங்கள், கையிருப்பில் உள்ள தடுப்பூசி மருந்துகள் ஆகியவற்றை சுலபமாக அறிந்து கொள்ளும் வசதியை, 'கூகுள்' தேடுபொறி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் 'கோவின்' எனப்படும் மொபைல்போன் செயலியில், கொரோனா தடுப்பூசி மையங்கள், தடுப்பூசி பதிவு, தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கூகுள் நிறுவனம், கோவின் செயலியுடன் இணைந்து, தடுப்பூசி தகவல்களை உடனுக்குடன் அளிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வசதி இந்த வாரத்தில் செயல்பாட்டிற்கு வரும். இதன்படி, கூகுளில் உள்ள 'சர்ச், மேப்ஸ், அசிஸ்டென்ட்' ஆகிய மூன்று பிரிவுகளில் நாட்டில் உள்ள 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்களின் விபரங்களை உடனுக்குடன் அறியலாம்.

இந்த மையங்களில் கையிருப்பில் உள்ள தடுப்பூசி மருந்து விபரங்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக பதிவு செய்துள்ளோர் தகவல்கள் ஆகியவற்றையும் காணலாம்.இந்த வசதியை, ஆங்கிலத்துடன், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட எட்டு மொழிகளில் கூகுள் வழங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X