எஸ்.எஸ்.ஐ.,யிடம் தகராறு: வாலிபர் மீது போலீசார் வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.எஸ்.ஐ.,யிடம் தகராறு: வாலிபர் மீது போலீசார் வழக்கு

Added : செப் 01, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த கே.என்.புதூரை சேர்ந்தவர் கேசவன், 30, விவசாயி. அதேபகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு கடன் கொடுத்து, அதில், 1.50 லட்சம் ரூபாயை அத்தரப்பு கொடுக்காததால் இருவருக்குள்ளும் தகராறு இருந்து வந்தது. இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் கேசவனை அடித்து உதைத்ததாக புகார் அளிக்கப்பட்டும், சங்கர் தரப்பில் இதுவரை யாரும் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த கே.என்.புதூரை சேர்ந்தவர் கேசவன், 30, விவசாயி. அதேபகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு கடன் கொடுத்து, அதில், 1.50 லட்சம் ரூபாயை அத்தரப்பு கொடுக்காததால் இருவருக்குள்ளும் தகராறு இருந்து வந்தது. இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் கேசவனை அடித்து உதைத்ததாக புகார் அளிக்கப்பட்டும், சங்கர் தரப்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால் விரக்தியிலிருந்த கேசவன், கடந்த, 30ல், நேரலகிரி செக்போஸ்ட் அருகே பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., ராமராஜூலுவிடம் சென்று, தான் கொடுத்த புகாரில் யார் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உடனடியாக சங்கர் தரப்பை கைது செய்யவில்லை எனில் சும்மா இருக்கமாட்டேன் எனக்கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து எஸ்.எஸ்.ஐ., ராமராஜூலு புகார்படி வேப்பனஹள்ளி போலீசார், கேசவன் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X