பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுவிரியன் பாம்பு கடித்து ப்ளஸ் 1 மாணவர் பலி

Added : செப் 01, 2021
Share
Advertisement
ஆத்தூர்: கட்டுவிரியன் பாம்பு கடித்ததில், ப்ளஸ் 1 மாணவர் உயிரிழந்தார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, களரம்பட்டி கிராத்தை சேர்ந்த, அருள்முருகன் மகன் தமிழரசு, 15. இவர், ப்ளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 27ல், மாலை, 4:30 மணியளவில், வாலிபால் விளையாடும் இடத்திற்கு சென்றுள்ளார்.தொடர்ந்து, மாலை, 6:30 மணியளவில், வீட்டிற்கு நடந்து வந்தபோது, கட்டுவிரியன் பாம்பு மாணவர் தமிழரசுவை கடித்துள்ளது.

ஆத்தூர்: கட்டுவிரியன் பாம்பு கடித்ததில், ப்ளஸ் 1 மாணவர் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, களரம்பட்டி கிராத்தை சேர்ந்த, அருள்முருகன் மகன் தமிழரசு, 15. இவர், ப்ளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 27ல், மாலை, 4:30 மணியளவில், வாலிபால் விளையாடும் இடத்திற்கு சென்றுள்ளார்.தொடர்ந்து, மாலை, 6:30 மணியளவில், வீட்டிற்கு நடந்து வந்தபோது, கட்டுவிரியன் பாம்பு மாணவர் தமிழரசுவை கடித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று, மாணவர் உயிரிழந்தார். மல்லியக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X