பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி போட்டுக் கொண்டோரிடம் கொரோனா பாதிப்பு குறைவு

Updated : செப் 03, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:'நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டோரிடம் கொரோனா பாதிப்பு, எதிர்பார்த்ததை விட மிக குறைவாகவே உள்ளது. வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை தடுப்பூசி பாதுகாக்கிறது. மேலும், உருமாறிய வைரஸ் எதுவும், இப்போது பரவவில்லை' என, 'இன்சாகாக்' எனப்படும் மத்திய அரசின் கொரோனா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்கு எதிராக, 'கோவிஷீல்டு,
தடுப்பூசி    கொரோனா பாதிப்பு,. குறைவு! புதிய  வைரஸ்

புதுடில்லி:'நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டோரிடம் கொரோனா பாதிப்பு, எதிர்பார்த்ததை விட மிக குறைவாகவே உள்ளது. வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை தடுப்பூசி பாதுகாக்கிறது. மேலும், உருமாறிய வைரஸ் எதுவும், இப்போது பரவவில்லை' என, 'இன்சாகாக்' எனப்படும் மத்திய அரசின் கொரோனா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு எதிராக, 'கோவிஷீல்டு, கோவாக்சின்' உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தடுப்பூசி போடும் பணி, ஜனவரி 16ல் துவங்கியது. கடந்த எட்டு மாதத்தில், 64 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி 'டோஸ்'கள் போடப்பட்டுள்ளன.கொரோனாவுக்கு எதிராக, பல நாடுகளிலும் மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால், தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என, டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.அதே போல, பல நாடுகளில், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டோரில் பலர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.இன்சாகாக்இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு பற்றி, இன்சாகாக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டில், தடுப்பூசி போட்டுக் கொண்டோரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, எதிர்பார்த்ததை விட மிக குறைவாக உள்ளது. மொத்த பாதிப்பில், தடுப்பூசி போட்டுக் கொண்டபின் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை, 0.5 சதவீதத்தை விட குறைவாகவே உள்ளது. வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் கருவியாக தடுப்பூசி செயல்படுகிறது, தடுப்பூசி போட்டுக் கொண்டபின், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, அதன் தாக்கம் குறைவாகவே இருந்தது. அவர்களில் பலர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முழுமையாக குணமடைந்துவிட்டனர்.


டெல்டா பிளஸ்தடுப்பூசி போட்டுக் கொண்டபின், கொரோனாவால் பாதிக்கப்பட்டு யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை. இந்தியா உட்பட பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரசான, 'டெல்டா மற்றும் டெல்டா பிளஸ்' ஆகியவை தான் அதிகளவில் பரவியுள்ளன. இந்தியாவில் புதிதாக உருமாறிய வைரஸ் எதுவும் பரவியுள்ளதாக, எந்த தகவலும் இல்லை. கொரோனா மூன்றாவது அலை பரவல் அதிகரித்தாலும், பெரும் பாதிப்பு இருக்காது. அதனால் அச்சம் அடைய தேவையில்லை. எனினும், கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழியவில்லை. அதனால், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டக் கூடாது. முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டோர், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை, அதற்கான நேரத்தில் சரியாக போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாநில அரசுகளுக்கு உத்தரவுஉச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கவுரவ் குமார் பன்சால் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:கொரோனாவுக்கு எதிராக, மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால், மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களில், தடுப்பூசி போட, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த இல்லங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது என்பது இயலாத செயல். அதனால், காப்பகங்களில் உள்ள மனநிலை பாதிக்கப்படடோருக்கு, தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட், விக்ரம் நாத், ஹீமா கோஹ்லி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:மனநல காப்பகங்களில் உள்ளோருக்கு, ஒரு மாதத்துக்குள் தடுப்பூசி போடுவதற்கான கால நேரத்தை, மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும். அந்த இல்லங்களில் உள்ளோருடன் தொடர்பில் உள்ளோருக்கும், தடுப்பூசி போடப்பட வேண்டும். மனநல காப்பகங்களில் தடுப்பூசி போடப்பட்ட விபரங்களை, அக்டோபர் 15ம் தேதிக்குள், மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthiban B -  ( Posted via: Dinamalar Android App )
02-செப்-202109:18:33 IST Report Abuse
Parthiban B அப்படி என்றால் எனக்கு 2வது தடுப்பூசி போட்டு 7வது நாள் covid வந்தது... சுமார் 20நாள் நான் மிகவும் சிரம பட்டேன் தடுப்பூசிக்கும் இதுக்கு சம்பந்தம் இல்லை
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-செப்-202107:16:50 IST Report Abuse
Kasimani Baskaran கோவிட்19 பாதிப்பில் முக்கியமானது உள்ளுறுப்புக்கள் பாதிக்கப்படுவது. தடுப்பூசி போடவில்லை என்றால் நோய் தொற்றி சில நாட்களுக்குள் பல உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்தான நிலை வரலாம். நோய் தாக்கும் பட்சத்தில் டயப்பட்டீஸ் அல்லது இதய நோய் உள்ளோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழக்க வாய்ப்பு அதிகம். தடுப்பூசி போட்டால் அதிக சேதம் வர வாய்ப்பு மிகக்குறைவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X