சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனி குடித்தனம் செல்வது தொடர்பாக தம்பதி தகராறு மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

Added : செப் 01, 2021
Share
Advertisement
ஆத்தூர்: தனி குடித்தனம் செல்வது தொடர்பாக, தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், மனைவி புகாரில், கணவர் மீது, கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் மாவட்டம், ஆத்துார், புதுப்பேட்டை முஸ்லிம் தெருவை சேர்ந்த, மோசா, 30. இவரது மனைவி சனா, 22, இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.தம்பதியினர் இடையே தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக தகராறு

ஆத்தூர்: தனி குடித்தனம் செல்வது தொடர்பாக, தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், மனைவி புகாரில், கணவர் மீது, கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார், புதுப்பேட்டை முஸ்லிம் தெருவை சேர்ந்த, மோசா, 30. இவரது மனைவி சனா, 22, இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.தம்பதியினர் இடையே தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர், மோசா, தனது மனைவி சனாவை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதில் காயமடைந்த சனா, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவி சனா புகாரில், கணவர் மோசா மீது, கொலை மிரட்டல் உள்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். அதேபோல், மோசா புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த, உறவினரான லியாகத்அலிகான், 30, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X