அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனியார் கட்டடங்களும் வல்லுனர் குழுவால் ஆய்வு

Added : செப் 01, 2021
Share
Advertisement
''சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி பெற்று கட்டப்படும், தனியார் கட்டடங்கள் தரத்தை உறுதிப்படுத்த, வல்லுனர் குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும்,'' என, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.தி.மு.க., - ராஜேந்திரன்: சென்னை அருகே, திருமழிசையில் துணை நகரம் உருவாக்கப்படும் என, 2011ல் தெரிவித்தனர். அந்த இடம், கொரோனா காலத்தில் காய்கறி மார்க்கெட் வைப்பதற்கு

''சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி பெற்று கட்டப்படும், தனியார் கட்டடங்கள் தரத்தை உறுதிப்படுத்த, வல்லுனர் குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும்,'' என, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

தி.மு.க., - ராஜேந்திரன்:

சென்னை அருகே, திருமழிசையில் துணை நகரம் உருவாக்கப்படும் என, 2011ல் தெரிவித்தனர். அந்த இடம், கொரோனா காலத்தில் காய்கறி மார்க்கெட் வைப்பதற்கு தான் உதவியது. குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு, வீடு அவசியமாக உள்ளது. சொந்த வீடு, அவர்களின் கனவாக உள்ளது. தமிழக மக்களின் கனவை, முதல்வர் நிறைவேற்றி தர வேண்டும். திருவள்ளூர் மாவட்டம், மப்பேடில், குடிசை மாற்று வாரியம் சார்பில், 1,200 வீடு கட்ட முடிவு செய்யப்பட்டது. அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மக்களின் கருத்தை கேட்காமலே, திட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே, மக்கள் கருத்துக்களை கேட்ட பின், திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர் அன்பரசன்:

மப்பேடு மற்றும் அரும்பாக்கத்தில், 509.50 கோடி ரூபாய் செலவில், 3,912 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதுவரை 13.31 கோடி ரூபாய் செலவிடப்பட்டுஉள்ளது. சட்டசபை கூட்டம் முடிந்ததும், மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.

ராஜேந்திரன்:

வீடு கட்ட அனுமதி, 60 நாளில் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளீர்கள். அதற்கு, 10 நாட்கள் போதும். கடந்த 2011ல் நானே 10 நாளில் அனுமதி பெற்றுள்ளேன். தற்போது, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில், 'சிஸ்டம்' கெட்டுஉள்ளது.கட்டுமானத்தை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, சி.எம்.டி.ஏ.,வுக்கு உள்ளது. அதன் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். சி.எம்.டி.ஏ., எல்லையை, அரக்கோணம் வரை விரிவுபடுத்தினர். அடிப்படை உள்கட்டமைப்பு உள்ள பகுதிகளில், எல்லை இருக்க வேண்டும்.

அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாமல், சி.எம்.டி.ஏ., எல்லையை மட்டும் விரிவாக்கம் செய்வது தவறு. துணை நகரம் போன்று நகர்களை உருவாக்கிய பின், சி.எம்.டி.ஏ., எல்லையை விரிவுபடுத்துங்கள்.

அமைச்சர் முத்துசாமி:

துணை நகரம் திட்டத்தை வேகப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும். தரம் ஆய்வு குறித்து கூறினார். வாரிய கட்டடம் மட்டுமின்றி, தனியார் கட்டடத்திற்கு அனுமதி பெற்று கட்டும்போது, அதன் தரத்தையும் பார்க்க வேண்டிய கடமை உள்ளது.இதை, துறை அதிகாரிகள் வழக்கமாக செய்வர். இது தவிர, வல்லுனர் குழு அமைத்து, தேவைப்படும் நேரத்தில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சி.எம்.டி.ஏ., விரிவாக்கம் என்பது, விரிவாக்கம் செய்து அடிப்படை வசதிகளை செய்து, முழு கட்டுப்பாட்டிற்குள் வந்தால் தான் திட்டமிட்ட வளர்ச்சி இருக்கும். எனவே தான் விரிவாக்கம் செய்கிறோம். துறையில் நிறைய இடங்கள் காலியாக உள்ளன. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.நிலம் கையகப்படுத்தும்போது, நிறைய பிரச்னைகள் உள்ளன. அதற்கும் முதல்வர் வழிமுறைகளை கூறியுள்ளார். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X