அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனுமதியற்ற மனை வரன்முறை

Added : செப் 01, 2021
Share
Advertisement
தி.மு.க., - அம்பேத்குமார்: கடந்த ஆட்சியில், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அனைத்து குடியிருப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு, தரமற்று கட்டப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்ய, குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குழு தலைவர் யார்; குழு அறிக்கை எப்போது வரும் என்பதை தெரிவிக்க வேண்டும்.மனை

தி.மு.க., - அம்பேத்குமார்:
கடந்த ஆட்சியில், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அனைத்து குடியிருப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு, தரமற்று கட்டப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்ய, குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குழு தலைவர் யார்; குழு அறிக்கை எப்போது வரும் என்பதை தெரிவிக்க வேண்டும்

.மனை பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சி.எம்.டி.ஏ.,வில் ஒரு கோப்பு அனுமதி பெற, மூன்று மாதங்கள் ஆகின்றன. அங்கிருந்து, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், பதிவு செய்ய மூன்று மாதம்ஆகிறது. இரண்டையும் ஒருங்கிணைத்து, அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்தால், காலதாமதத்தை தவிர்க்கலாம். ஒற்றை சாளர முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசத்தை, மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும். தமிழகத்தில் நிலத்தின் மதிப்பு அதிகரிப்பதால், வெளிமாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை வாங்கி, முதலீடாக வைத்துள்ளனர். இவ்வாறு வாங்கப்படும் விளை நிலங்கள், ஓராண்டுக்குள் பயன்படுத்தப் படாவிட்டால், அரசு ஆர்ஜிதம் செய்ய வேண்டும்.


அமைச்சர் அன்பரசன்:

சென்னை புளியந்தோப்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தரத்தை ஆய்வு செய்ய, சென்னை ஐ.ஐ.டி.,யின் அங்கமாக செயல்படும் நிறுவனத்தின், பேராசிரியர் பத்மநாபன் தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டது; ஆய்வு நடந்து வருகிறது. இரண்டு வாரங்களில் அறிக்கை தருவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X