அரசியல் செய்தி

தமிழ்நாடு

விமான நிலைய விரிவாக்கம் முதல்வருக்கு சிந்தியா கடிதம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை விமான நிலையத்தின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, ஒதுக்கப்பட வேண்டிய 88 ஏக்கர் நிலத்தை வழங்குமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கடிதம் எழுதி உள்ளார்.கடிதம் விபரம்: சென்னை விமான நிலையத்தில், இதர கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, 93.04 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. 697 ஏக்கர் நிலம் தேவைஇதில், 5.04 ஏக்கர் நிலம்

சென்னை:சென்னை விமான நிலையத்தின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, ஒதுக்கப்பட வேண்டிய 88 ஏக்கர் நிலத்தை வழங்குமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கடிதம் எழுதி உள்ளார்.

கடிதம் விபரம்: சென்னை விமான நிலையத்தில், இதர கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, 93.04 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. 697 ஏக்கர் நிலம் தேவைஇதில், 5.04 ஏக்கர் நிலம் மட்டுமே, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள, 88 ஏக்கர் நிலம், இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.

இதே போல, திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம், முனைய கட்டடம் உட்பட பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு, 40.93 ஏக்கர் நிலம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது; 87.04 ஏக்கர் நிலம் தரப்படவில்லை.மதுரை விமான நிலையத்தில், ஓடுபாதை விரிவாக்கம் உட்பட பல்வேறு பணிகளுக்காக, 61௬ ஏக்கர் நிலம் தேவை. இதில், 529 ஏக்கர் மட்டுமே கிடைத்துள்ளது. மீதம், 87.04 ஏக்கர் தரப்படவில்லை.

கோவை விமான நிலையத்தில், ஓடுபாதை விரிவாக்கம், புதிய முனைய கட்டடம் உட்பட, பல்வேறு கட்டமைப்பு பணிகளுக்காக, 628 ஏக்கர் நிலம் தேவை. துாத்துக்குடி விமான நிலைய மேம்பாட்டு பணிகளுக்காக, 697 ஏக்கர் நிலம் தேவை. சேலம் விமான நிலையத்தை தரம் உயர்த்த, 446 ஏக்கர் நிலம் வேண்டும். எனவே, விமான நிலையங்களுக்கு வேண்டிய நிலங்களை, விரைவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


100 சதவீதம் நிதி

சர்வதேச உடான் திட்டத்தில், தமிழகத்தில் இருந்து, பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, மதுரை -- துபாய், மதுரை -- சிங்கப்பூர், மதுரை -- கொழும்பு, கோவை -- துபாய், கோவை -- சிங்கப்பூர், கோவை -- கோலாலம்பூர் மற்றும் கோவை -- கொழும்பு ஆகிய நாடுகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு பயணியர் வரவில்லை எனில், அதற்கான நிதியை, 100 சதவீதம் வழங்க, தமிழக அரசு ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்கு ஒப்புதல் அளித்தால், விமான நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரும் பணியை துவக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X