அரசியல் செய்தி

தமிழ்நாடு

6 மாதங்களில் 80 ஆயிரம் வீடுகள் குடிசை மாற்று வாரியம் தயார்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சென்னை:''நெடுஞ்சாலைத் துறையின், 'பேக்கேஜ் டெண்டர்' போல், குடிசை மாற்று வாரிய ஒப்பந்த பணியில் உள்ள, 'டர்ன் கீ சிஸ்டம்' ஒழிக்கப்படும்,'' என, குடிசை மாற்று வாரிய அமைச்சர் அன்பரசன் கூறினார்.அவரது பதிலுரை: குடிசை மாற்று வாரியத்தால், 366 திட்டப் பகுதிகளில், 1.85 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் பராமரிக்கப் படுகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில், 2017 முதல், 2020 வரை, 61 திட்டப்

சென்னை:''நெடுஞ்சாலைத் துறையின், 'பேக்கேஜ் டெண்டர்' போல், குடிசை மாற்று வாரிய ஒப்பந்த பணியில் உள்ள, 'டர்ன் கீ சிஸ்டம்' ஒழிக்கப்படும்,'' என, குடிசை மாற்று வாரிய அமைச்சர் அன்பரசன் கூறினார்.

அவரது பதிலுரை: குடிசை மாற்று வாரியத்தால், 366 திட்டப் பகுதிகளில், 1.85 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் பராமரிக்கப் படுகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில், 2017 முதல், 2020 வரை, 61 திட்டப் பகுதிகளில், 20 ஆயிரத்து 56 வீடுகள் கட்டியுள்ளனர்.


காலியாக உள்ளன

இதில், ஒருவர் கூட குடியேறாமல் காலியாக உள்ளன. ஊருக்கு வெளியே, 17 கி.மீ., தொலைவில் கட்டப்பட்டதே காரணம். மதுரை, தேனி, காஞ்சிபுரம், திருப்பூர், புதுக்கோட்டையில், 9,000த்துக்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக உள்ளன. இவற்றை வழங்க, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட, 30 ஆயிரத்து 312 அடுக்குமாடி குடியிருப்புகள் மோசமாக உள்ளன.

இந்த வீடுகள், நான்கு ஆண்டுகளில் மறுகட்டுமானம் செய்யப்படும். முன், 220 சதுரடியில் வீடுகளை கட்டினர். தற்போது, 420 சதுரடியில் வீடுகளை கட்டுகிறோம். கூடுதல் இடம் தேவைப்படும் என்பதால், அடுக்குமாடிகளை அதிகப்படுத்துகிறோம். நெடுஞ்சாலைத் துறையில் இருந்த பேக்கேஜ் சிஸ்டம் போன்று, குடிசை மாற்று வாரியத்தில், 2017ல் டர்ன் கீ சிஸ்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒப்பந்ததாரரே வடிவமைத்து, அவரே கட்டடத்தை கட்ட, இந்த சிஸ்டம் இருந்துள்ளது. இது, பெரிய அளவில் சம்பாதிக்க உருவாக்கப்பட்ட திட்டம்.

இது, முற்றிலும் ஒழிக்கப்படும். 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற திட்டத்தில் வீடு கேட்டு, 21 ஆயிரத்து 838 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியானவர்களுக்கு பங்கு தொகை பெற்று, வீடுகள் வழங்கப்படும்.


யார் யாருக்கு?

அடுத்த ஆறு மாதங்களில், 80 ஆயிரம் வீடுகள் தயாராகி விடும். இப்போது, 21 ஆயிரம் வீடுகள் தயார் நிலையில் உள்ளன. எனவே, யார் யாருக்கு வீடுகள் இல்லையோ, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, ஏழு மாதங்களில், ஒரு லட்சம் வீடுகள் வழங்கப்படும். குடிசை மாற்று வாரிய வீடுகள், 50 ஆண்டுகள் நீடித்து இருக்கும் வகையில் உறுதியாக கட்டி தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X