அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளர்களுக்கு 53,341 வீடுகள் கட்ட அரசு முடிவு

Added : செப் 01, 2021
Share
Advertisement
சென்னை:'வெளி மாநில தொழிலாளர்களுக்கு, ஐந்து இடங்களில் 53 ஆயிரத்து 341 குடியிருப்புகள் கட்டப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, குறைந்த வாடகை வீட்டுவசதி வளாகங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. இந்த தொழிலாளர்கள்

சென்னை:'வெளி மாநில தொழிலாளர்களுக்கு, ஐந்து இடங்களில் 53 ஆயிரத்து 341 குடியிருப்புகள் கட்டப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, குறைந்த வாடகை வீட்டுவசதி வளாகங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. இந்த தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகில், தனியார் நிறுவன நிலத்தில், அந்நிறுவனங்கள் வாயிலாக, மத்திய அரசு மானியத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் இரண்டு இடங்கள்; ஸ்ரீபெரும்புதுாரில் இரண்டு இடங்கள்; ஓசூரில் ஒரு இடம் என ஐந்து இடங்களில், 117 கோடி ரூபாயில், 53 ஆயிரத்து 341 குடியிருப்புகள் கட்டும் பணிகள், இந்த நிதி ஆண்டில் துவங்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X