பொது செய்தி

தமிழ்நாடு

12 மண்டலமாக தமிழகம் பிரிப்பு

Added : செப் 01, 2021
Share
Advertisement
சென்னை:'மாஸ்டர் பிளான்' உள்ளிட்ட நகர்ப்புற திட்டமிடல் பணிகளுக்காக, தமிழகம், 12 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளது. சட்டசபையில், தாக்கல் செய்யப்பட்ட, வீட்டுவசதி துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:சென்னை பெருநகர் போல, மதுரை பெருநகர் வளர்ச்சி குழுமம், கோவை - திருப்பூர் பெருநகர் வளர்ச்சி குழுமம் மற்றும் ஒசூர் நகர்புற வளர்ச்சி குழுமம் ஏற்படுத்துவதற்கான

சென்னை:'மாஸ்டர் பிளான்' உள்ளிட்ட நகர்ப்புற திட்டமிடல் பணிகளுக்காக, தமிழகம், 12 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளது.

சட்டசபையில், தாக்கல் செய்யப்பட்ட, வீட்டுவசதி துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை பெருநகர் போல, மதுரை பெருநகர் வளர்ச்சி குழுமம், கோவை - திருப்பூர் பெருநகர் வளர்ச்சி குழுமம் மற்றும் ஒசூர் நகர்புற வளர்ச்சி குழுமம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. முழுமை திட்டம் தயாரிப்புக்காக, தமிழகம் முழுதும், இதுவரை எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது. இதற்கு மாற்றாக, நில பயன்பாட்டை முறைப்படுத்த, தமிழகம், 12 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளது.

அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகள் வரன்முறை திட்டத்தில், 29 ஆயிரத்து 461 மனைப் பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 27 ஆயிரத்து 949 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், மனைகளுக்கான, 5.87 லட்சம் விண்ணப்பங்களில், 5.75 லட்சம் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X