அரசியல் செய்தி

தமிழ்நாடு

குற்றங்கள் நடக்காத சூழல் வேண்டும்! புது எஸ்.ஐ.,க்களுக்கு அறிவுரை

Updated : செப் 03, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை : ''குற்றங்கள் குறைய வேண்டும் என்பதை விட, குற்றமே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக, காவல் துறை மாற வேண்டும் என்பது என்னுடைய ஆசை,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், எஸ்.ஐ., பணிக்கு, 280 பெண்கள் உட்பட, 941 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தாண்டு ஜூலை 26ல், பணி நியமன ஆணைகளை, முதல்வர் வழங்கினார்.இவர்களுக்கு, தமிழ்நாடு
குற்றங்கள் நடக்காத சூழல், புது எஸ்.ஐ.,க்கள், அறிவுரை

சென்னை : ''குற்றங்கள் குறைய வேண்டும் என்பதை விட, குற்றமே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக, காவல் துறை மாற வேண்டும் என்பது என்னுடைய ஆசை,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், எஸ்.ஐ., பணிக்கு, 280 பெண்கள் உட்பட, 941 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தாண்டு ஜூலை 26ல், பணி நியமன ஆணைகளை, முதல்வர் வழங்கினார்.இவர்களுக்கு, தமிழ்நாடு உயர் பயிற்சியகத்தில், ஓராண்டு அடிப்படை பயிற்சி நேற்று துவங்கியது. பயிற்சியை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:குற்றங்கள் குறைய வேண்டும் என்பதை விட, குற்றமே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக, காவல் துறை மாற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இது உங்கள் ஆசையாகவும் மாற வேண்டும். நம் விருப்பம் செயலாகத் துவங்கினால், தமிழகம் செழிப்படையும்.எந்த அரசாக இருந்தாலும், மக்கள் எதிர்பார்ப்பது அமைதி தான். அந்த அமைதியை உருவாக்கி தரும் மாபெரும் கடமை, காவல் துறைக்கு தான் இருக்கிறது. அதை முதலில் நெஞ்சில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

உடல் வளம், மனத்திறம், அறிவு வளம் ஆகிய மூன்றும் உள்ளவர்களாக, நீங்கள் மாற வேண்டும். அநியாயத்தை தடுக்க, எப்போதும் தயங்காதீர்கள். நியாயத்துக்காக எப்போதும் நில்லுங்கள்.உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும், சட்டத்தின் முன் நிறுத்துங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுங்கள். இவை அனைத்தையும் சட்டப்பூர்வமாக செய்யுங்கள்.இவ்வாறு முதல்வர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், டி.ஜி.பி., சைலேந்திரபாபு, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குனர் அமல்ராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-202121:31:47 IST Report Abuse
அப்புசாமி இது மாதிரியான ஒரு முடிவை கட்டுமரம் எடுத்திருந்தால் 1980 களில் ஒரு அப்பாவிப் பெண் சென்னையில் துரத்தி துரத்தி துன்புறுத்தப் பட்டிருக்க மாட்டார். நினைத்தேன். சிரிக்கிறேன். புது எஸ்.ஐ ங்களுக்கு 80 களில் சென்னை பற்றிய அறிவு புரிதல் விவரம் இருக்குமா?
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
02-செப்-202120:16:22 IST Report Abuse
bal குற்றங்களின் அடித்தளமே கழகங்கள்தான்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
02-செப்-202120:15:29 IST Report Abuse
bal அப்படின்னா திமுக, திக, விசிக மக்களை உள்ளே வைக்க வேண்டும்...அராஜக கும்பல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X