பொது செய்தி

தமிழ்நாடு

விதி மீறும் வாகனங்களால் விபத்து அபாயம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
சூலுார் : சூலுார் மார்க்கெட் ரோட்டில், விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.சூலுாரில் தாலுகா அலுவலகம் அருகில் ரயில்வே பீடர் ரோடும், மார்க்கெட் ரோடும், பேரூராட்சி வீதியும் சந்திக்கின்றன.ரயில்வே பீடர் ரோட்டில், மேற்கு மற்றும் தெற்கில் இருந்து வரும் வாகனங்கள், சூலுார் பிரிவு மற்றும் மார்க்கெட் ரோட்டில் செல்கின்றன.அதேபோல், சூலுார்
 விதி மீறும் வாகனங்களால் விபத்து அபாயம்

சூலுார் : சூலுார் மார்க்கெட் ரோட்டில், விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

சூலுாரில் தாலுகா அலுவலகம் அருகில் ரயில்வே பீடர் ரோடும், மார்க்கெட் ரோடும், பேரூராட்சி வீதியும் சந்திக்கின்றன.ரயில்வே பீடர் ரோட்டில், மேற்கு மற்றும் தெற்கில் இருந்து வரும் வாகனங்கள், சூலுார் பிரிவு மற்றும் மார்க்கெட் ரோட்டில் செல்கின்றன.அதேபோல், சூலுார் பிரிவில் இருந்து வரும் வாகனங்கள், இந்த சந்திப்பைக் கடந்து, திருச்சி ரோட்டுக்கு செல்ல வேண்டும்.அங்கிருந்து, கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிச் செல்ல வேண்டும். சூலுார் பிரிவில் இருந்து வரும் வாகனங்கள், நேரடியாக ரயில்வே பீடர் ரோட்டில் திரும்புவதற்கு, போலீசார் தடை விதித்துள்ளனர்.

அந்த சாலையை, ஒரு வழிப் பாதையாக அறிவித்து, டிவைடர் கற்கள் வைத்துள்ளனர்.ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள், விதிகளை மீறி, வாகனங்களை தாலுகா அலுவலகம் அருகில் திருப்பி, ரயில்வே பீடர் ரோட்டில், மேற்கு நோக்கி, ஒரு வழிப்பாதையில் செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயமும்ஏற்படுகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'விதிமீறும் வாகனங்களால், முறையாக ஓட்டும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகினறனர். போக்குவரத்து நெரிசலோடு, அடிக்கடி விபத்தும் நடக்கிறது.

விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்களைப் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான், விதிமீறல்கள் கட்டுக்குள் வரும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X