அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிலுரை நேரத்தில் அமைச்சர் 'மிஸ்சிங்'

Added : செப் 01, 2021
Share
Advertisement
சட்டசபையில், சமூகநலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, குடிசை மாற்று வாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வராததால், மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு பேச அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி, பலரும் துறை சார்ந்த பிரச்னைகள் மட்டுமின்றி, தொகுதி

சட்டசபையில், சமூகநலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, குடிசை மாற்று வாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வராததால், மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு பேச அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி, பலரும் துறை சார்ந்த பிரச்னைகள் மட்டுமின்றி, தொகுதி பிரச்னைகள் குறித்தும் பேசினர். விவாதம் முடிந்ததும், சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை பதிலுரை வழங்க, சபாநாயகர் அப்பாவு அழைத்தார். ஆனால், அவர் இருக்கையில் இல்லை; சபைக்கு வெளியே சென்றிருந்தார்.

இதையடுத்து, பதிலுரை வழங்க, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியை சபாநாயகர் அழைத்தார். அதற்குள் அவசர அவசரமாக கீதா ஜீவன் சபைக்கு வந்தார். இறுதியாக அவருக்கு பதிலுரை வழங்க வாய்ப்பு தரப்பட்டது. தன் துறைக்கு மட்டுமின்றி, முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகள் துறைக்கும் சேர்த்து, அவர் பதிலுரை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X