மாநில அந்தஸ்து? மத்திய அரசிடம் கோர முதல்வர் முடிவு

Updated : செப் 02, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுச்சேரி : ''புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக பிரதமரிடம் ஏற்கனவே கேட்டுள்ளேன். மத்திய அரசும் இதுகுறித்து முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தேவைப் பட்டால் இந்த கூட்டத்தொடரில் மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவோம். நேரில் சென்றும் வலியுறுத்துவோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது'' என
மாநில அந்தஸ்து? மத்திய அரசிடம் கோர  ரங்கசாமி முடிவு


புதுச்சேரி : ''புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக பிரதமரிடம் ஏற்கனவே கேட்டுள்ளேன். மத்திய அரசும் இதுகுறித்து முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தேவைப் பட்டால் இந்த கூட்டத்தொடரில் மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி
மத்திய அரசுக்கு அனுப்புவோம். நேரில் சென்றும் வலியுறுத்துவோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது'' என சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி நேற்று அறிவித்தார்.புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக. 26ல் துவங்கியது. அன்று மாலையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.


9,924.41 கோடி ரூபாய்இதன் மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் ரங்கசாமி நேற்று பேசியதாவது:புதுச்சேரி மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளை களைந்து நல்ல ஆட்சியை தருவோம். புதுச்சேரி அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் 9,924.41 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவினங்களுக்காக 1200.44 கோடி வருவாய் செலவினங்களுக்கு 8723.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை 60 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக உயர்த்த நிடி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளேன். மத்திய அரசும் செய்து தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது.

மத்திய அரசு 1.5 சதவீதம் மட்டுமே கூடுதலாக நிதி அளித்துள்ளதாக கூறுகிறீர்கள். கடந்த ஜனவரி மாதமே பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால் நாம் மே மாதம் தான் ஆட்சிக்கு வந்துள்ளோம். இதனால் உடனடியாக கூடுதல் நிதியை தரவில்லை. அடுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி பெற முடியும்.மேலும் ஏற்கனவே பிரதமரிடம் கூடுதலாக 500 கோடி நிதி கேட்டுள்ளோம். இதை மீண்டும் வலியுறுத்தி பெறுவோம். அதிக நிதி பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். மத்திய அரசு நமக்கு ஒத்துழைப்பு அளிக்கும்.


கோரிக்கைபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான் எங்கள் நோக்கம். நீண்ட நாட்களாக முதல்வராக இருந்த அனுபவத்தில் மாநில அந்தஸ்து இல்லாதது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும். இது தொடர்பாக பிரதமரிடம் ஏற்கனவே கேட்டுள்ளேன். மத்திய அரசும் ஒரு முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.தேவைப்பட்டால் இந்த கூட்டத்தொடரில் இது தொடர்பாக மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவோம். நேரில் சென்றும் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்துவோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


கொரோனா இறப்புக்கு நிவாரணம்முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிதி வழங்குவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே எவ்வளவு நிதி வழங்கப்படும் என்பதை தீர்ப்புக்கு பின் முடிவு செய்யப்படும். கொரோனா தொற்றில் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுபட்ட பத்திரிகையாளர்களுக்கு நல்ல இடம் பார்த்து வீட்டு மனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகைமுதல்வர் ரங்கசாமி பேசியதாவது:கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய தேசிய ஊரக சுகாதார இயக்கக ஊழியர்களை கொண்டு சுகாதாரத் துறையில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும். சுகாதாரத் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் டாக்டர்கள், லேப் டெக்னீஷியன் போன்ற ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.மற்ற துறைகளில் இருப்பவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். மருத்துவப் பயிற்சி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை 5000த்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-செப்-202101:04:27 IST Report Abuse
தமிழவேல் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். கேளிக்கை விடுதிகள், பார், ரெஸ்டாரண்ட், சினிமாக்கள், amusement பார்க், தங்கும் விடுதிகள் என ஒரு சொர்க்கமாக மாற்றலாம். வெளிநாட்டவர்களும் கூட வந்து குவிவார்கள்..
Rate this:
Cancel
Sri - Ghisin,கோஸ்டாரிகா
02-செப்-202113:04:49 IST Report Abuse
Sri புதுச்சேரி அரசு ஆண்ட அனைத்து முதல்வர்களும் ஊழல் வாதிகளுக்கு துனைபோகிறவர்கள்..இந்த கட்அவுட் போஸ்டர் முதல்வர் மோசமான ஆட்சியாளர்இவரை சீக்கிரம் பதவி இறக்குவது புது சேரிக்கு நல்லது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
02-செப்-202110:34:20 IST Report Abuse
sankaseshan மொரார்ஜி தேசாய் PM ஆக இருந்தபோது புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கலாம் என்று யோசனை சொன்னார் புதுச்சேரி அரசின் எதிர்ப்பால் கைவிட பட்டது புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு மத்தியில் ஜனதா அரசு எதனை பேருக்கு இது தெரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X