பொது செய்தி

தமிழ்நாடு

திருவாடானையில் காவிரி குடிநீர் திட்ட விரிவாக்கம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
திருவாடானை : திருவாடானை தொகுதியில் காவிரி குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தி தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்என்று எம்.எல்.ஏ. கருமாணிக்கம் பேசினார்.திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம் சட்டசபையில் பேசியதாவது:விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்கவேண்டும்.தொண்டி, ஆர்.எஸ்.மங்கலத்தில் கலைக்கல்லுாரி துவங்க வேண்டும்.

திருவாடானை : திருவாடானை தொகுதியில் காவிரி குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தி தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்என்று எம்.எல்.ஏ. கருமாணிக்கம் பேசினார்.

திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம் சட்டசபையில் பேசியதாவது:விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்கவேண்டும்.தொண்டி, ஆர்.எஸ்.மங்கலத்தில் கலைக்கல்லுாரி துவங்க வேண்டும். ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை துார்வாரவேண்டும்.

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் வன்னிவயல் பாலத்தை உயர்த்தி கட்டவேண்டும். இத் தொகுதியில் காவிரி குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து கிராமங்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

திருவாடானை வட்டார தலைவர் கணேசன், நகரதலைவர் செந்தில்குமார், ஊராட்சி தலைவர் குமார், மாவட்ட துணை தலைவர் விஸ்வநாதன், மாவட்ட பொதுசெயலாளர்கள் கண்ணன், சத்தியசீலன், மீனவர் பிரிவு மாநில செயலாளர் முத்துராக்கு, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திகைராஜா, சுமதிமுத்துராக்கு ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X