பொது செய்தி

தமிழ்நாடு

18 லட்சம் கல்லுாரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு தயார்

Updated : செப் 03, 2021 | Added : செப் 01, 2021
Share
Advertisement
சென்னை: ''தமிழகத்தில், கல்லுாரி மாணவர்கள் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை, லயோலா கல்லுாரியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்ட பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் 3.26 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில், 5.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி
18 லட்சம் கல்லுாரி மாணவர்கள், தடுப்பூசி , அரசு தயார்

சென்னை: ''தமிழகத்தில், கல்லுாரி மாணவர்கள் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை, லயோலா கல்லுாரியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்ட பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் 3.26 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

நேற்று முன்தினம் ஒரே நாளில், 5.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள, 122 அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், சென்னை மாநகராட்சி சார்பில், தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதோருக்கு, முகாம்களில் தடுப்பூசி போடப்படுகிறது. பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்களை சரிபார்த்த பின், கல்லுாரிகளில் அனுமதிக்கப் படுகின்றனர்.

மாணவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்தபின், வகுப்பறைகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்பறையிலும் மாணவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.தமிழகத்தில், கல்லுாரி மாணவர்கள் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. தி.மு.க., அரசு பொறுப்பேற்கும் முன், தினசரி 61 ஆயிரம் தடுப்பூசிகள் என, 63 லட்சம் தடுப்பூசிகள் தான் போடப்பட்டு இருந்தன. மே 7க்கு பின், தடுப்பூசி செலுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தியதால், 116 நாட்களில், 2.60 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X