அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தன்னிறைவு பெற்றதாக தி.மலை மாவட்டம் மாறும்'

Added : செப் 01, 2021
Share
Advertisement
கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:துணை சபாநாயகர் பிச்சாண்டி: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் தொகுதி, ஆணானந்தல் முதல் பொரிக்கல் துரிஞ்சல் ஆறு வரை உள்ள, 2 கி.மீ., மண் சாலையை தார் சாலையாக அமைக்க, அரசு ஆவன செய்யுமா?அமைச்சர் பெரிய கருப்பன்: இச்சாலை, 2,300 மீட்டர் துாரம் கொண்டது. இதில், 314 மீட்டர் சாலை, இருப்பு பாதையை ஒட்டி, மண் சாலையாக உள்ளது. 300 மீட்டர் சேதமடைந்த தார்

கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

துணை சபாநாயகர் பிச்சாண்டி:

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் தொகுதி, ஆணானந்தல் முதல் பொரிக்கல் துரிஞ்சல் ஆறு வரை உள்ள, 2 கி.மீ., மண் சாலையை தார் சாலையாக அமைக்க, அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் பெரிய கருப்பன்:

இச்சாலை, 2,300 மீட்டர் துாரம் கொண்டது. இதில், 314 மீட்டர் சாலை, இருப்பு பாதையை ஒட்டி, மண் சாலையாக உள்ளது. 300 மீட்டர் சேதமடைந்த தார் சாலையாகவும், மற்ற பகுதி, சேதமடைந்த ஜல்லி சாலையாகவும் உள்ளது. இருப்பு பாதையை ஒட்டியுள்ள சாலையை தவிர்த்து, மீதமுள்ள சாலை, ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில், தார் சாலையாக தரம் உயர்த்தப்படும். ரயில்வே துறையிடம் தடையில்லா சான்று பெற்று, 300 மீட்டர் துார சாலை மேம்படுத்தப்படும்.

பிச்சாண்டி:

திருவண்ணாமலை மாவட்டத்தில், கிராம சாலைகள் அதிகம் உள்ளன. பல்வேறு மாவட்டங்களில், கிராம சாலைகள், நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டு சீரமைக்கப் பட்டு உள்ளன. ஊராட்சிகளுக்கு அதிக நிதி வராததால், கிராம சாலைகள் போடப்படாமல் உள்ளன. எனவே, இச்சாலைகளை, நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றி, சீரமைக்க வேண்டும்.

அமைச்சர் பெரியகருப்பன்:

நல்ல யோசனை. ஊராட்சிகளில் நிதி பற்றாக்குறை உள்ளது.ஊரக வளர்ச்சி துறை சார்பில் அமைக்கப்படும் சாலைகள் தவிர்த்து, மற்ற சாலைகளை, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சீரமைக்க, பேச்சு நடந்து வருகிறது. தன்னிறைவு பெற்ற மாவட்டமாக, திருவண்ணாமலை மாவட்டம் மாற்றப்படும்.

தி.மு.க., - கருணாநிதி:

பல்லாவரம், புனித தோமையார் மலை ஒன்றியத்தில், இரண்டு பெரிய ஊராட்சிகள் உள்ளன. விமான நிலையம் பின்புறம், வளர்ச்சி அடையாத பகுதியாக உள்ளது. அங்கு போதிய நிதி ஆதாரம் இல்லை. தற்போது, மாநகராட்சியுடன் இணைய உள்ளது. மாநகராட்சியில் இணையும் வரை, சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

பெரிய கருப்பன்:

பல்லாவரம் தொகுதியில், இரண்டு ஊராட்சிகள் தான் உள்ளன. அவையும் தாம்பரம் மாநகராட்சி பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஊராட்சிகளிலும், தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X