பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணிகள் பார்வைக்கு விருந்து கவியருவியில் கண்கவரும் ஓவியங்கள்

Added : செப் 01, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆழியாறு கவியருவியில், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஓவியங்கள், சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விருந்து படைக்க காத்திருக்கின்றன. ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன.இங்கு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சுற்றுலா தலங்கள் அதிகளவில் உள்ளன. ஆழியாறு
 சுற்றுலா பயணிகள் பார்வைக்கு விருந்து   கவியருவியில் கண்கவரும் ஓவியங்கள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆழியாறு கவியருவியில், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஓவியங்கள், சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விருந்து படைக்க காத்திருக்கின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன.இங்கு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சுற்றுலா தலங்கள் அதிகளவில் உள்ளன. ஆழியாறு பகுதியில், பட்டாம் பூச்சி பூங்கா, கவியருவி; டாப்சிலிப்பில் யானை சவாரி, அட்டக்கட்டியில், ஆர்க்கிட்டோரியம், வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன.விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் குடும்பத்துடன் வரும், சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்து மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி, கடந்தாண்டு முதல் வசதிகளை மேம்படுத்தும் விஷயத்தில் வனத்துறையினர் கவனம் செலுத்தினர்.மனம் கவருதுகடந்தாண்டு ஆழியாறு கவியருவியில், சிமென்ட் கலவையால் வடிவமைக்கப்பட்ட மான், யானை, குரங்குகளின் உருவம், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளன. புலி குட்டியுடன் உலா வரும் ஓவியம் வெகுவாக கவர்கிறது.கவியருவியில் குளிக்க செல்லும், சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பிரம்மிப்பு ஏற்படுத்துகின்றன.

குழந்தைகள், பெரியவர்கள், என, அனைவரும் ரசிக்கும் வகையில் ஓவியங்கள் உள்ளன.அரசு அனுமதி அளித்த பின் வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிக்க காத்திருக்கின்றன.எகிரும் எதிர்பார்ப்பு!கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து, பூங்காக்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. வால்பாறைக்கு செல்லவும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆழியாறு கவியருவியில் மழைப்பொழிவு காரணமாக, நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த சூழலில், அனுமதி கொடுத்தால் இயற்கையாக வரும் மூலிகை நீரில் குளித்து மகிழ ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இன்று முதல் அனுமதிஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டம் துணை இயக்குனர் கணேசன் அறிக்கை: பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள அனுமதிக்கப்பட்ட சுற்றுலாத் தலங்கள், கொரோனா பரவல் காரணமாக, சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், இன்று முதல் (2ம் தேதி) மீண்டும் சுற்றுலாப் பயணிகள், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அனுமதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் பார்வையிட மத்திய, மாநில அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பார்வையிட அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X