அரசியல் செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருத்துவ கல்லுாரி எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை

Added : செப் 01, 2021
Share
Advertisement
காங்., - அசோகன்: தென்காசி தொகுதிக்குட்பட்ட ஆயிரப்பேரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ளது. அப்பகுதியில் கால்நடை வளர்ப்பு அதிகம். கால்நடைகளுக்கு நோய் வந்தால், அதிக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அங்கு கால்நடை மருத்துவக் கல்லுாரி அமைக்க வேண்டும்.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: தென்காசியில் இருந்து 60 கி.மீ., துாரத்தில், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லுாரி

காங்., - அசோகன்:

தென்காசி தொகுதிக்குட்பட்ட ஆயிரப்பேரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ளது. அப்பகுதியில் கால்நடை வளர்ப்பு அதிகம். கால்நடைகளுக்கு நோய் வந்தால், அதிக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அங்கு கால்நடை மருத்துவக் கல்லுாரி அமைக்க வேண்டும்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்:

தென்காசியில் இருந்து 60 கி.மீ., துாரத்தில், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. எனவே, தென்காசியில் கால்நடை மருத்துவக் கல்லுாரி தற்போது அமைக்க சாத்தியம் இல்லை. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் 2.70 கோடி ரூபாயில், வெள்ளாடு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது.

அரசு தலைமை கொறடா கோவி.செழியன்:

திருவிடைமருதுார் தொகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இங்கு கால்நடை மருத்துவக் கல்லுாரி அமைத்து தர வேண்டும்.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: துறை ஆய்வு செய்து, நிதி நிலைமைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., - மார்கண்டேயன்:

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட, முத்தலாபுரம் ஒன்றியத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் மாட்டு சந்தை செயல்பட்டது. அங்கு அரசு நிலம், 100 ஏக்கர் உள்ளது. அங்கு கால்நடை மருத்துவக் கல்லுாரி அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்:

வரும் காலத்தில் ஆய்வு செய்து, முதல்வரின் கவனத்திற்கு எடுத்த செல்லப்பட்டு, நிதி நிலைக்கேற்ப அரசு நடவடிக்கை எடுக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X