கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பிரேமலதாவின் 'பாஸ்போர்ட்' திருப்பி தர ஐகோர்ட் உத்தரவு

Added : செப் 01, 2021
Share
Advertisement
சென்னை:துபாய் செல்வதற்காக, நடிகர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின், 'பாஸ்போர்ட்'டை திருப்பி வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தே.மு.தி.க., பொருளாளரான பிரேமலதா, பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்தார். அதை புதுப்பித்து, மண்டல அதிகாரி வழங்கினார். இந்நிலையில், திருநெல்வேலியில் பதிவான வழக்கை மறைத்ததாக, அவரது பாஸ்போர்ட் திரும்ப

சென்னை:துபாய் செல்வதற்காக, நடிகர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின், 'பாஸ்போர்ட்'டை திருப்பி வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தே.மு.தி.க., பொருளாளரான பிரேமலதா, பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்தார். அதை புதுப்பித்து, மண்டல அதிகாரி வழங்கினார். இந்நிலையில், திருநெல்வேலியில் பதிவான வழக்கை மறைத்ததாக, அவரது பாஸ்போர்ட் திரும்ப பெறப்பட்டது.தற்போது சிகிச்சைக்காக விஜயகாந்த், துபாய் சென்றுள்ளார்; அவருடன் மகன் சென்றுள்ளார்.

கணவர் உடன் இருந்து உதவி செய்ய, துபாய் செல்வதற்காக, பாஸ்போர்ட்டை திருப்பித் தரக் கோரி, உயர் நீதிமன்றத்தில் பிரேமலதா மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன், விசாரணைக்கு வந்தது. பிரேமலதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'திருநெல்வேலியில் பதிவான வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரவில்லை. வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பார்' என்றார்.

இதையடுத்து, பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்கும்படி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு, நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். வெளிநாடு சென்று வரும் தேதியை பாஸ்போர்ட் அதிகாரியிடம் தெரிவித்து, விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்து, மனு தாக்கல் செய்யும்படி, பிரேமலதாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X