பொது செய்தி

தமிழ்நாடு

காந்தை ஆற்றில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

Added : செப் 01, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : "பரிசலில் பயணம் செய்யும் மாணவ, மாணவிகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காந்தை ஆறு அருகே, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தெரிவித்தார்.சிறுமுகை அடுத்த லிங்காபுரத்துக்கும், காந்தவயலுக்கும் காந்தை ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் உள்ளது. பவானிசாகர் அணையில் நீர்மட்டம், 96 அடியை
 காந்தை ஆற்றில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

மேட்டுப்பாளையம் : "பரிசலில் பயணம் செய்யும் மாணவ, மாணவிகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காந்தை ஆறு அருகே, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சிறுமுகை அடுத்த லிங்காபுரத்துக்கும், காந்தவயலுக்கும் காந்தை ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் உள்ளது. பவானிசாகர் அணையில் நீர்மட்டம், 96 அடியை எட்டும்போது, இப்பாலம், நீரில் மூழ்கி விடும்.தற்போது அணையில், 102 அடிக்கு தண்ணீர் தேங்கியிருப்பதால், காந்தை ஆற்றில், 30 அடிக்கு மேல் நீர் தேங்கியுள்ளது. காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர், லிங்காபுரம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள், ஆற்றைக் கடக்க பரிசலைப் பயன்படுத்துகின்றனர்.

பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டதால், மாணவர்களும் பரிசலைப் பயன்படுத்துகின்றனர்.எனவே, இப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, கலெக்டர் சமீரன், உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் கூறியதாவது:காந்தை ஆற்றைக் கடக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, காந்தை ஆற்றின் அருகே, சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு, ஆம்புலன்ஸ் வசதியுடன், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் ஆகியோர் அடங்கிய குழு, நிரந்தரமாக தங்கியுள்ளனர்.ஆற்றில் ஏதேனும் விபத்துகள் நடந்தால், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு வர முடியும். இதனால், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X