பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன வெங்காயம் விலை சரிவு: விவசாயிகள் கவலை

Added : செப் 01, 2021
Share
Advertisement
மடத்துக்குளம் : மடத்துக்குளத்தில் சின்ன வெங்காயம் விலை சரிவால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில், சின்ன வெங்காயம் குறிப்பிடத்தக்க சாகுபடியாக உள்ளது. கடந்த சில மாதங்களாக, சின்ன வெங்காயம் 60 ரூபாயிலிருந்து, 150 ரூபாய் வரை விற்பனையானதால், நடப்பு பருவத்திலும் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், பல விவசாயிகள், இதை சாகுபடி
 சின்ன வெங்காயம் விலை சரிவு: விவசாயிகள் கவலை

மடத்துக்குளம் : மடத்துக்குளத்தில் சின்ன வெங்காயம் விலை சரிவால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில், சின்ன வெங்காயம் குறிப்பிடத்தக்க சாகுபடியாக உள்ளது.

கடந்த சில மாதங்களாக, சின்ன வெங்காயம் 60 ரூபாயிலிருந்து, 150 ரூபாய் வரை விற்பனையானதால், நடப்பு பருவத்திலும் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், பல விவசாயிகள், இதை சாகுபடி செய்திருந்தனர்.தற்போது அறுவடை தொடங்கி நடந்து வரும் நிலையில், சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், என மூன்று தரப்பினருக்கும் மூன்று விதமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், 'வெங்காயத்தின் விலை, மக்களை பாதிக்கும் விதமாக இருந்தது. தற்போது விலை குறைந்து, 5 கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாவது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'தற்போது, ஒரு ஏக்கர் சாகுபடிக்கு, நடவு தொடங்கி அறுவடை செய்தல் வரை, 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு, விலை நிலவரத்தை கணக்கீடு செய்து லாபம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தற்போது நாளுக்கு நாள் விலை சரிந்து வருவது கவலையாக உள்ளது' என்றனர்.

வியாபாரிகள் கூறுகையில், 'விளைபொருட்களை வாங்கி விற்பனை செய்கிறோம். இடையில் எங்கள் உழைப்பிற்கு தகுந்த அளவு லாபம் சேர்த்து கொடுக்கிறோம். இதனால், விலை உயர்ந்தாலும், சரிந்தாலும் பெரிதளவு எங்களை பாதிப்பது இல்லை' என்றனர். விலையேற்றத்தின் போது, பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். விலை சரியும் போது விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இந்த நிலை மாறவேண்டுமென்றால், விளைபொருட்களை நேரடியாக அரசே கொள்முதல் செய்து, இருப்புவைத்து, ஆண்டு முழுவதும் சரியான, சீரான விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X