அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு பவன் பாராட்டு

Added : செப் 01, 2021
Share
Advertisement
சென்னை:'ஸ்டாலின் ஆட்சி நிர்வாகம், அரசின் செயல்பாடுகள் அனைத்தும், தமிழகத்திற்கு மட்டுமின்றி, மற்ற மாநிலங்களுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது' என, நடிகர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிஉள்ள பாராட்டு கடிதம்:எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், ஆட்சிக்கு வர
 ஸ்டாலினுக்கு  பவன் பாராட்டு

சென்னை:'ஸ்டாலின் ஆட்சி நிர்வாகம், அரசின் செயல்பாடுகள் அனைத்தும், தமிழகத்திற்கு மட்டுமின்றி, மற்ற மாநிலங்களுக்கும், அனைத்து கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது' என, நடிகர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிஉள்ள பாராட்டு கடிதம்:எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், ஆட்சிக்கு வர வேண்டுமென்றால், அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னும், அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள்.

உங்களது ஆட்சி நிர்வாகம், அரசின் செயல்பாடுகள் அனைத்தும், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X