பொது செய்தி

தமிழ்நாடு

மின் சாதனங்களில் விளம்பரம் தடுக்க தனிச் சட்டம் வருமா?

Added : செப் 01, 2021
Share
Advertisement
சென்னை:மின் வினியோக சாதனங்களில் விளம்பரம் செய்வோர் மீது, மின் வாரியமே நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தனி சட்டம் இயற்றுமாறு, தமிழக அரசுக்கு மின் வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக மின் வாரியம், அனைத்து இணைப்புகளுக்கும், மின் கம்பம், மின் வினியோக பெட்டி, டிரான்ஸ்பார்மர் போன்ற சாதனங்கள் உதவியுடன், மின் வினியோகம் செய்கிறது. அவற்றில் கட்சியினர், சினிமா

சென்னை:மின் வினியோக சாதனங்களில் விளம்பரம் செய்வோர் மீது, மின் வாரியமே நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தனி சட்டம் இயற்றுமாறு, தமிழக அரசுக்கு மின் வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக மின் வாரியம், அனைத்து இணைப்புகளுக்கும், மின் கம்பம், மின் வினியோக பெட்டி, டிரான்ஸ்பார்மர் போன்ற சாதனங்கள் உதவியுடன், மின் வினியோகம் செய்கிறது. அவற்றில் கட்சியினர், சினிமா நிறுவனங்கள், 'போஸ்டர்' ஒட்டுவது, ஓவியங்கள் வரைவது என, விளம்பரம் செய்கின்றனர். இதனால், அந்த சாதனங்கள் பழுதாவதுடன், மின் விபத்துகளும் ஏற்படுகின்றன.மின் சாதனங்களில் விளம்பரம் செய்வோர் மீது, மின் வாரியமே நடவடிக்கை எடுப்பதற்கு விதிகள் இல்லை.

இதனால், மின் சாதனங்களில் விளம்பரம் செய்வதை தடுக்க, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை, மின் வாரியமே எடுக்கும் வகையில் தனி சட்டம் இயற்ற, முந்தைய ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், அச்சட்டம் இயற்றப்படவில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. சட்டசபையில் வரும், 7ம் தேதி எரிசக்தி துறை மீதான விவாதம் நடக்கிறது.அப்போது, மின் சாதனங்களில் விளம்பரம் செய்வோர் மீதான நடவடிக்கை தொடர்பாக, தனி சட்டம் இயற்றுமாறு, அரசுக்கு மின் வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X