பொது செய்தி

தமிழ்நாடு

பிரசவம் பார்த்த பெண் போலீசார் டி.ஐ.ஜி., பாராட்டு சான்றிதழ்

Updated : செப் 02, 2021 | Added : செப் 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தஞ்சாவூர் :மனநலம் பாதிக்கப்பட்ட பெண், பிரசவ வலியில் துடித்தபோது, துரிதமாக செயல்பட்டு தாயையும் சேயையும் காப்பாற்றிய பெண் போலீசாரை தஞ்சை டி.ஐ.ஜி., பாராட்டினர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரையில், ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், ஆக., 30ம் தேதி பிரசவ வலியால் துடித்து, ரத்தப்போக்குடன் கிடந்துள்ளார். அவ்வழியாக சென்ற, மேற்கு
 பிரசவம் பார்த்த பெண் போலீசார் டி.ஐ.ஜி., பாராட்டு சான்றிதழ்

தஞ்சாவூர் :மனநலம் பாதிக்கப்பட்ட பெண், பிரசவ வலியில் துடித்தபோது, துரிதமாக செயல்பட்டு தாயையும் சேயையும் காப்பாற்றிய பெண் போலீசாரை தஞ்சை டி.ஐ.ஜி., பாராட்டினர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரையில், ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், ஆக., 30ம் தேதி பிரசவ வலியால் துடித்து, ரத்தப்போக்குடன் கிடந்துள்ளார்.

அவ்வழியாக சென்ற, மேற்கு ஸ்டேஷன் பெண் போலீஸ் சுகுணா, மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த சில பெண் போலீசார், பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு முதலுதவி அளித்தனர். அங்கேயே பெண் குழந்தை பிறந்தது. கும்பகோணம் மேற்கு இன்ஸ்பெக்டர் பேபி, ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தாய், சேயை சேர்க்க வைத்தார். தஞ்சை சரக டி.ஐ.ஜி., பிரவேஷ்குமார், தாயையும், சேயையும் காப்பாற்றிய பெண் போலீசாரை பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
விசாரணையில், பாலக்கரையைச் சேர்ந்த ஜான், 40 என்பவர், மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கியது தெரிந்தது. அவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajj - Thanjavur,இந்தியா
02-செப்-202111:34:33 IST Report Abuse
rajj இவர்களை மனதார வாழ்த்துகிறேன்
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
02-செப்-202109:40:32 IST Report Abuse
அசோக்ராஜ் பாலக்கரை ஜான் கைதே ஆகி விட்டாரா? போப்பாண்டவர் அனுமதி கிடைத்ததா?
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
02-செப்-202108:49:48 IST Report Abuse
BALU உதவினார்கள் என்பதைவிட எப்படிப்பட்ட சூழ்நிலையில் உதவினார்கள் என்பதே மிகவும் முக்கியம்.தாயுள்ளம் கொண்ட அந்த காகக்கிச்சட்டை தேவதைகளுக்கு கோடானுகோடி நன்றி இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அருளும்படி வேண்டுகிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X