ஜம்மு : ஜம்மு காஷ்மீரின் மூத்த பிரிவினைவாத தலைவரான சையது அலி கிலானி (92 வயது) காலமானார். அவரது மறைவுக்கு பிடிபி கட்சி தலைவர் மெஹ்பூபா முப்தி இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி இருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவர் காலமானதாக, மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவர் மெஹ்பூபா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று (செப்.,1 - புதன் கிழமை) இரவு 10.30 மணிக்கு அவர் காலமானதாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முப்தி தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: கிலானியின் மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது. பல விஷயங்களில் எங்களுக்கிடையே உடன்பாடு ஏற்படாமல் இருந்திருக்கிலாம். ஆனால் அவரது உறுதித் தன்மை மற்றும் தன்னம்பிக்கைக்காக நான் அவரை மதிக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதல் வழங்கட்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement