பொது செய்தி

தமிழ்நாடு

'ஓரின சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் போலீசுக்கு தண்டனை வழங்க புதிய விதி'

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை:ஓரினச் சேர்க்கையாளர், மூன்றாம் பாலினத்தவர்களை துன்புறுத்தும் போலீசாருக்கு தண்டனை வழங்கும் வகையில் விதிகள் ஏற்படுத்த, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள், ஒன்றாக சேர்ந்து வாழ விரும்பினர். பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, சென்னை வந்து காப்பகத்தில் தங்கினர். இருவரையும் காணவில்லை என, பெற்றோர் புகார் அளித்தனர்.

சென்னை:ஓரினச் சேர்க்கையாளர், மூன்றாம் பாலினத்தவர்களை துன்புறுத்தும் போலீசாருக்கு தண்டனை வழங்கும் வகையில் விதிகள் ஏற்படுத்த, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள், ஒன்றாக சேர்ந்து வாழ விரும்பினர். பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, சென்னை வந்து காப்பகத்தில் தங்கினர். இருவரையும் காணவில்லை என, பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, தங்களை துன்புறுத்தக் கூடாது; பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவும், துன்புறுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டார். ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக, உத்தரவுகளும் பிறப்பித்தார். அவற்றை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யவும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இவ்வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, டி.ஜி.பி.,யின் அறிக்கையை தாக்கல் செய்தார்.


சுற்றறிக்கை

நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றும்படி, போலீஸ் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓரினச் சேர்க்கையாளர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உதவும், தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுப்பதாகவும், அவர்களையும் போலீசார் துன்புறுத்துவதாகவும், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு:போலீசாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நீதிமன்றத்தின் கருத்துக்களை, டி.ஜி.பி.,யிடம் தெரிவிப்பதாகவும், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.ஓரினச் சேர்க்கையாளர், மூன்றாம் பாலினத்தவர்கள் மட்டுமின்றி, தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களையும் போலீசார் துன்புறுத்தக் கூடாது.

போலீசார் துன்புறுத்தினால், அதை ஒருங்கீனமாக கருதி, தண்டனை வழங்கும் வகையில், போலீஸ் நடத்தை விதிகளில் புதிய பிரிவை சேர்க்க வேண்டும்.போலீசாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை, ஓரினச் சேர்க்கையாளர், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வாயிலாக நடத்த வேண்டும். இந்த சமூகத்தினருக்கு, சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி, அரசு முன்மாதிரியாக திகழ வேண்டும்.

அவர்களை அங்கீகரிக்கவும், முன்னேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.


சுயக் கட்டுப்பாடு



ஓரினச் சேர்க்கையாளர் பற்றிய செய்திகளை வெளியிடும்போது, பத்திரிகைகளும், ஊடகங்களும் சுயக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், ஊடகங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.வார்த்தைகளை கவனமுடன் பயன்படுத்த வேண்டும்; தரக்குறைவாக இருக்கக் கூடாது.மத்திய, மாநில அரசுகள், இந்தப் பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து சாதகமான நடவடிக்கைகளை எடுக்கும் என, இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. விசாரணை, அக்., 4க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X