பொது செய்தி

தமிழ்நாடு

'முதல்வர் தனிப்பிரிவில் மக்கள் கூட வேண்டாம்'

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை:'முதல்வர் தனிப்பிரிவில் கூடுவதை தவிர்த்து, இணையவழி சேவைகளை பயன்படுத்த வேண்டும்' என, அரசு கூறியுள்ளது.தமிழக அரசு செய்திக்குறிப்பு:சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் தனிப்பிரிவு செயல்படுகிறது. இங்கு தினமும் பொது மக்களிடம் பெறப்படும் மனுக்கள், மாவட்டங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.சமீப காலங்களில், இலவச வீடு

சென்னை:'முதல்வர் தனிப்பிரிவில் கூடுவதை தவிர்த்து, இணையவழி சேவைகளை பயன்படுத்த வேண்டும்' என, அரசு கூறியுள்ளது.

தமிழக அரசு செய்திக்குறிப்பு:சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் தனிப்பிரிவு செயல்படுகிறது. இங்கு தினமும் பொது மக்களிடம் பெறப்படும் மனுக்கள், மாவட்டங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.சமீப காலங்களில், இலவச வீடு ஒதுக்கீடு கோரி, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், நீண்ட வரிசையில் மனுக்கள் அளிக்க காத்திருக்கின்றனர். இதனால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில், தொய்வு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் தனிப்பிரிவில், நேரடியாக மட்டுமின்றி, www.cmcell.tn.gov.in என்ற இணையதளம், cmcell@tn.gov.in என்ற, 'இ - மெயில்' முகவரி மற்றும் தபால் வழியாகவும், முதல்வர் உதவி மையமான, cmhelpline.tnega.org வாயிலாகவும் மனு பெறப்படுகிறது.முதல்வர் தனிப்பிரிவில் ஆயிரக்கணக்கில் கூடுவதை தவிர்க்க வேண்டும். இணையவழி சேவைகளை பயன்படுத்தி பயன் பெறவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X