கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நுழைவு வரி தடை கோரி மனு இயக்குனர்களுக்கு 'வாரன்ட்'

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை:இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தாத, இரு நிறுவனங்களின் இயக்குனர்களுக்கு, 'வாரன்ட்' பிறப்பித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சென்னையை சேர்ந்த கிராந்த் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன இயக்குனர் மற்றும் முருகன் எர்த் மூவர்ஸ் நிறுவன உரிமையாளர், கட்டுமான தொழிலுக்காக, வெளிநாட்டில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்தனர்.அவற்றுக்கு நுழைவு வரி

சென்னை:இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தாத, இரு நிறுவனங்களின் இயக்குனர்களுக்கு, 'வாரன்ட்' பிறப்பித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையை சேர்ந்த கிராந்த் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன இயக்குனர் மற்றும் முருகன் எர்த் மூவர்ஸ் நிறுவன உரிமையாளர், கட்டுமான தொழிலுக்காக, வெளிநாட்டில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்தனர்.அவற்றுக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர்பாக, மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டும், அவர்கள் பதில் அளிக்கவில்லை.மேலும், நுழைவு வரி செலுத்தும் நிலையில் அவர்கள் இல்லை எனவும் தெரிவித்தார். எனவே, இருவருக்கும் ஜாமினில் வர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு, பதிவுத்துறை தெரியப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் வாயிலாக, வாரன்ட்டை அமல்படுத்த வேண்டும். விசாரணை, வரும், 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X