அரசியல் செய்தி

தமிழ்நாடு

தாலிக்கு தங்கம் திட்டம் 3.34 லட்சம் பேர் காத்திருப்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை:''சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.அவரது பதிலுரை:கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவி தொகை திட்டத்தில், இதுவரை, 127 பேர் பயன் அடைந்துள்ளனர்.பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், அரசு பஸ்களில், இலவசமாக பயணம் செய்யலாம் என, முதல்வர் உத்தரவிட்டார்.இதுநாள்

சென்னை:''சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

அவரது பதிலுரை:கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவி தொகை திட்டத்தில், இதுவரை, 127 பேர் பயன் அடைந்துள்ளனர்.பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், அரசு பஸ்களில், இலவசமாக பயணம் செய்யலாம் என, முதல்வர் உத்தரவிட்டார்.

இதுநாள் வரை, 6.50 கோடி பெண்கள், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் பயன் அடைந்து உள்ளனர்.மதிய உணவு திட்டத்தில் வழங்கப்படும், முட்டை கொள்முதல் செய்வதற்கான, 'டெண்டர்' முறை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால், அரசின் செலவினம் குறைக்கப்படும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. முதல்வர் ஒப்புதல் பெற்று நிரப்பப்படும்.


உண்மை தன்மை

கடந்த ஆட்சியில், ஐந்து வகையான திருமண உதவித் திட்டங்கள், முறையாக செயல்படுத்தப் பட வில்லை. விண்ணப்பதாரர்களின் உண்மைத் தன்மை விசாரிக்கப்படவில்லை. திருமணமாகி, மூன்று ஆண்டுகளாகியும், திருமண உதவித்தொகை வழங்கப்படவில்லை. தாலிக்கு தங்கம் எனப் பெயர் வைத்திருந்தாலும், தாலிக்கு தங்கம் வழங்கப்படவில்லை.

இதனால், ஏழை தாய்மார்கள் கடனாளி ஆக்கப்பட்டனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், நிலுவை திருமண உதவித்தொகை, 28 ஆயிரம் பெண்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த, 2019 மார்ச் வரை மட்டுமே வழங்க முடிந்தது. தாலிக்கு தங்கம், 4 கிராம் என்றிருந்ததை, எட்டு கிராமாக, கடந்த ஆட்சியாளர்கள் உயர்த்தினர்.ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு செய்யப் பட வில்லை.

தற்போது, 3.34 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.தாம்பரம், கூடுவாஞ்சேரி, திருச்சி ஆகிய இடங்களில், 37.17 கோடி ரூபாயில், பெண்களுக்கான தங்கும் விடுதிகள் கட்டப்படுகின்றன. வாடகை வாகனம்சென்னை, வடபழநியில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்த மான இடத்தில், 822 படுக்கைகளுடன் கூடிய, பணிபுரியும் பெண்களுக்கான அரசு மகளிர் விடுதி கட்ட, ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் மீது, துரித நடவடிக்கை எடுக்க, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கு, வாடகை வாகனம் எடுத்துக் கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 19 புதிய வாகனங்கள், 1.39 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X