அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனியாரை விட நல்ல தரத்துடன் வீட்டுவசதி வாரிய கட்டடங்கள்

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை:''தனியார் கட்டடங்களை விட, ஒரு மடங்கு நல்ல தரத்தோடு, வீட்டுவசதி வாரிய கட்டடங்கள் இருக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்,'' என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.அவரது பதிலுரை:சென்னையை சுற்றிஉள்ள, 143 கிராமங்கள் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றன. இந்த கிராமங்களில், 'சாலை பின்னல்' என்ற, திட்டத்தின் கீழ் சாலை வசதி உள்ளிட்ட

சென்னை:''தனியார் கட்டடங்களை விட, ஒரு மடங்கு நல்ல தரத்தோடு, வீட்டுவசதி வாரிய கட்டடங்கள் இருக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்,'' என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.

அவரது பதிலுரை:

சென்னையை சுற்றிஉள்ள, 143 கிராமங்கள் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றன. இந்த கிராமங்களில், 'சாலை பின்னல்' என்ற, திட்டத்தின் கீழ் சாலை வசதி உள்ளிட்ட முன்னேற்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாமல்லபுரத்தில், 13.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பஸ் நிலையம் கட்டும் பணி பாதியில் விடப்பட்டுள்ளது. அந்த பணியை துவங்க, ஆய்வு செய்து வருகிறோம்.

வண்டலுார் - கிளாம்பாக்கத்தில், 393 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலையம், 2022ல் பயன்பாட்டிற்கு வரும்.துணை நகரம் அமைக்க வேண்டும் என்பது, முதல்வரின் விருப்பம். இதுதொடர்பான பணிகளில், துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நந்தனத்தில் வர்த்தக மையம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு, தொழில்நுட்ப காரணங்களுக்காக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை கட்டுவதற்கு, மீண்டும் ஆய்வு நடத்தப்படும்.

பட்டினப்பாக்கத்தில், 25 ஏக்கர் நிலத்தில், வர்த்தக வளாகம் கட்டப்படும். சென்னையின் அடையாளமாக திகழும் வகையில், இந்த கட்டடம் அமையும்.தவணை முறை திட்டத்தில் 1,078 வீடுகள், இன்னும் விற்கப்படாமல் இருக்கின்றன. இதில் இருந்தே நிலையை புரிந்து கொள்ளலாம். கோவை, சிங்கநல்லுாரில், 960 வீடுகள்; சென்னையில் பெசன்ட்நகர், அண்ணாநகர் நகர் மேற்கில், பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இடித்து கட்டுவதற்கு ஏற்பாடு செய்கிறோம்.

சுயஉதவி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, 6,900 வீடுகள் விற்காமல் உள்ளன. தேவையில்லாத இடத்திலும், தரமில்லாமலும் கட்டியது தான் காரணம். இனிமேல் கட்டப்படும் கட்டடங்கள் தரமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை பத்திரங்களை பெறாதவர்களுக்கு, அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று இதுவரை, 2,691 பேருக்கு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.மேம்படுத்தப்பட்ட மனைப்பிரிவு திட்டத்தில், 11 ஆயிரத்து, 496 மனைகள் விற்காமல் உள்ளன.

வாடகை வீடு கட்டடங்கள், 41 இடங்களில் இடியும் நிலையில் உள்ளன. அங்கு, இரண்டு ஆண்டுகளில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். எந்த கட்டடம் கட்டினாலும், தனியார் கட்டடங்களை விட, ஒருமடங்கு நல்ல தரத்தோடு இருக்க வேண்டும் என, திட்டமிட்டுள்ளோம்; 100 வீடு கட்டுகிறோம் என்பதை விட, 50 வீடுகள் அழகாக கட்டுகிறோம் என்பதே, எங்கள் நோக்கமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X