சொத்துக்களை பணமாக்குதல் குறித்த உண்மை!

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
'ஒரு உண்மை அதன் காலைச் சுற்றி வருவதற்குள், ஒரு பொய் உலகை பாதியளவு வலம் வந்து விடுகிறது' மக்களிடையே கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதற்கு, பொய்கள், பாதியளவு உண்மைகள் மற்றும் தவறான தகவல்கள் எந்தளவிற்கு பயன்படும் என்பதை விளக்குவதே, இந்தப் பிரபல பழமொழியின் கருப்பொருள் ஆகும். குத்தகைஇந்தப் பழமொழி, நமது பிரதான எதிர்க்கட்சி மற்றும் அதன் தோழமைக்
சொத்துக்களை பணமாக்குதல் குறித்த உண்மை!

'ஒரு உண்மை அதன் காலைச் சுற்றி வருவதற்குள், ஒரு பொய் உலகை பாதியளவு வலம் வந்து விடுகிறது' மக்களிடையே கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதற்கு, பொய்கள், பாதியளவு உண்மைகள் மற்றும் தவறான தகவல்கள் எந்தளவிற்கு பயன்படும் என்பதை விளக்குவதே, இந்தப் பிரபல பழமொழியின் கருப்பொருள் ஆகும்.


குத்தகைஇந்தப் பழமொழி, நமது பிரதான எதிர்க்கட்சி மற்றும் அதன் தோழமைக் கட்சியினர், தாங்களும் அரசியலில் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் எழுதியுள்ள, 'கடையை மூடுவதற்கு முந்தைய மாபெரும் தள்ளுபடி விற்பனை' என்ற கட்டுரையில், 'ஒரு மாபெரும் பொய் வெளியாகி விட்டது' எனக் கூறியிருக்கிறார்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது எது சிறந்தது என்று கூறப்பட்டதோ, அது, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தலைமையிலான ஆட்சியில் நடைபெற்றால் மோசமானது என்று கூறுகின்றனர். அவரது கட்டுரை, பாதியளவே உண்மையும், பொய்யான தகவல்களும் நிறைந்ததாக உள்ளது.பார்லிமென்ட் மூத்த உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவரும், அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்று கூறியிருப்பது மிகவும் பரிதாபகரமானது ஆகும்.

மோடி அரசின் நடவடிக்கைகள், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை, எதுவுமே இல்லாமல் ஆக்கப்படும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது என சிதம்பரம் கூறுகிறார். இது, தேசிய பணமாக்கல் திட்டம் என்ன செய்யப் போகிறது என்பதை அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அல்லது அவருக்குப் புரிந்திருந்தாலும் உண்மையை திசை திருப்பப் பார்க்கிறார் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.


latest tamil newsதேசியப் பணமாக்கல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு சொத்தும், விற்பனை செய்யப்படாது என்பது தான் உண்மை. பொது நலனைப் பாதுகாக்கும் விதமாக, வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற ஏலம் வாயிலாக அவை, தனியார் பங்குதாரர்களுக்கு குத்தகைக்குத்தான் விடப்பட உள்ளது.அனைத்து நடவடிக்கைகளும், நாட்டின் சட்டத்தையும், நீதிமன்றங்களையும் திருப்திபடுத்துவதாக இருக்கும். தனியார் பங்குதாரர், அந்த சொத்துக்களைப் பயன்படுத்தி, பராமரித்து, குத்தகை கால முடிவில் அரசிடம் திரும்ப ஒப்படைத்து விடுவார்.
சொத்துக்களைப் பணமாக்கும் திட்டத்தில், அரசு புதுமைகளைப் பயன்படுத்தி, புதிய அம்சங்களை அனுமதித்திருப்பது பற்றிய அறியாமையைத் தான் முன்னாள் நிதியமைச்சர் வெளிப்படுத்த விரும்புகிறார்.


கொள்கை முடிவுதுரதிருஷ்டவசமாக, 2 ஜி, நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு, காமன்வெல்த் மற்றும் ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு போன்றவை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிகால பணமாக்கல் நடவடிக்கைகளை, மாறுபட்ட விதத்தில் நினைவுபடுத்துவதாக உள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், சிதம்பரம் நிதியமைச்சராகவும், இதுபோன்ற முடிவுகளுக்கு பொறுப்பேற்கக் கூடிய அமைச்சசர்கள் குழுவின் தலைவராகவும் இருந்தபோது தான், டில்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டன.

ரயில்வே துறை, நாட்டின் முக்கியமான துறை என்றும், அதில் தனியார் பங்கேற்பை அனுமதிக்கக் கூடாது என்றும் சிதம்பரம் எழுதியுள்ளார். புதுடில்லி ரயில் நிலையத்தை புனரமைக்க, 2008-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தகுதிகாண் அழைப்பு விடுத்தபோது அவர், தன் எதிர்ப்பைத் தெரிவிக்காதது ஏன்?ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்குப் பிறகும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இதுபோன்று, பொதுச் சொத்துக்களைப் பயன்படுத்தி, பணம் திரட்டும் கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


வேலைவாய்ப்புகடந்த 2020- பிப்ரவரியில், மும்பை -- புனே நெடுஞ்சாலை வாயிலாக, மஹாராஷ்டிரா அரசு 8,262 கோடி ரூபாய் நிதி திரட்டியது. சிதம்பரமும், அவரது கட்சியும், முதல்வர் உத்தவ் தாக்கரே கையெழுத்திடுவதை தடுத்திருக்க வேண்டும். வேலைவாய்ப்பு குறித்தும் சிதம்பரம் சந்தேகங்களை எழுப்பியுள்ளார். வாஜ்பாய் அரசால் மேற்கொள்ளப்பட்ட தனியார்மயங்களை ஆராய்ந்தால், ஒரு செயலை திறமையாகக் கையாண்டால், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்பது தெரியவரும்.இதுதவிர, சொத்துக்களைப் பணமாக்கும்போது வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு மட்டுமின்றி, அரசு தன் வருவாயை மறுமுதலீடு செய்தால், ஒட்டுமொத்தமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagashivam - Thiruvallur,இந்தியா
02-செப்-202119:05:38 IST Report Abuse
Nagashivam பொதுத்துறை சொத்துகளை ஊழலால் கொள்ளையடித்தது காங்கிரஸ். 'தோழர்' என்ற பெயரில் சுரண்டியது கம்யூனிஸ்டுகள். இந்தியாவின் வளர்ச்சியை தடுத்த இரு கட்சிகளுமே தேச விரோத, தொழிலாளர் விரோத கட்சிகளே.
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
04-செப்-202112:25:44 IST Report Abuse
Saiகம்யூனிஸ்டுகள். தொழிலாளர் விரோத கட்சி புல்லரிக்குது...
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
02-செப்-202110:15:07 IST Report Abuse
பாமரன் இந்த கட்டுரையை எழுதிய மேதாவிக்கு ஒரேயொரு கேள்வி... வாஜ்பாய் சாலை கட்டுமானங்களை மேம்படுத்த இதே மாதிரிதான் குத்தகைக்கு தேசிய நெடுஞ்சாலைகளை குத்தகைக்கு கொடுத்து ஒரு குறிப்பிட்ட காலம்.. அதாவது அதிகபட்சம் இருபது வருடங்கள் அல்லது முதலீட்டை எடுத்த உடன் டோல் நிறுத்தப்பட்டு அரசின் வசம் ஒப்படைக்கப்படும் என்பதுதான் திட்டம்.. ஒழுங்கா நடந்ததா... இன்னிக்கு அரசே தனியாருடன் சேர்ந்து கொள்ளையடிக்கும் வாய்ப்பா ஆகிடுச்சு... மும்பை பூனா நெடுஞ்சாலை மாதிரி புதிய ஆல்டர்நேட் greenfield சாலைகளை குத்தகைக்கு விடுப்பதில் எந்த தவறும் இல்லை... ஆனால் மக்களின் அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் ரயில்களை தனியாரிடம் விடுவது மக்களுக்கு செய்யப்படும் துரோகம்.. நம் மக்களை தரம் உயர்த்திவிட்டு இந்த மாதிரி வெளிநாட்டு மாடல்களை செயல்படுத்த நினைக்கணும்... எல்லா திட்டங்களையும் பெயிண்ட் அடித்தே ஒப்பேத்த முடியாது...
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
02-செப்-202110:05:27 IST Report Abuse
பாமரன் முதலில் இந்த கட்டுரையை எழுதியர் யார்...???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X