தலிபான் - போராளிகள் பஞ்ஷிரில் மோதல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஆப்கானிஸ்தானில், போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ஷிர் மாகாணத்தை தலிபான் படை முற்றுகையிட்டுள்ளது. இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஆப்கனில் உள்ள 34 மாகாணங்களில், 33 மாகாணங்களை, தலிபான் படை எதிர்ப்பு ஏதுமின்றி கைப்பற்றியது. ஆனால், என்.ஆர்.எப்., எனப்படும் தேசிய பாதுகாப்பு முன்னணியின் கட்டுப் பாட்டில் உள்ள பஞ்ஷிர் மாகாணத்தை மட்டும்,

புதுடில்லி:ஆப்கானிஸ்தானில், போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ஷிர் மாகாணத்தை தலிபான் படை முற்றுகையிட்டுள்ளது. இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது.

ஆப்கனில் உள்ள 34 மாகாணங்களில், 33 மாகாணங்களை, தலிபான் படை எதிர்ப்பு ஏதுமின்றி கைப்பற்றியது. ஆனால், என்.ஆர்.எப்., எனப்படும் தேசிய பாதுகாப்பு முன்னணியின் கட்டுப் பாட்டில் உள்ள பஞ்ஷிர் மாகாணத்தை மட்டும், கடும் எதிர்ப்பு காரணமாக, தலிபான் பயங்கரவாதிகளால் கைப்பற்ற முடியவில்லை.

மறைந்த ராணுவ தளபதி அகமது ஷா மசூத்தின் மகன், அகமது மசூத் தலைமையில் என்.ஆர்.எப்., செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு, ஆப்கன் ராணுவம், உள்நாட்டு போராளிகள் குழு ஆதரவளித்து வருகின்றன. மேலும், ஆப்கன் துணை அதிபராக தன்னை அறிவித்துள்ள, அம்ருல்லா சாலேவும், அகமது மசூத்திற்கு ஆதரவாக உள்ளார்.

அமைதிப் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அகமது மசூத், 'தலிபான் தாக்கினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்' எனவும், எச்சரித்துள்ளார். இந்நிலையில், தலிபான் படை, பஞ்ஷிர் மாகாணத்தை முற்றுகையிட்டு அதிரடி தாக்குதல் நடத்தியது. இதை எதிர்த்து என்.ஆர்.எப்., படை நடத்திய தாக்குதலில், தலிபான் படையினர் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அதிக அளவிலான தலிபான் படையினர், பஞ்ஷிர் மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அம்மாகாணத்திற்கான தொலைதொடர்பு, இணைய வசதி ஆகியவற்றை தலிபான் துண்டித்துள்ளது. இதையடுத்து, அங்கு இரு தரப்பிற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X