பொது செய்தி

இந்தியா

காந்தி படுகொலை குறித்து புதிய புத்தகம் வெளியீடு

Added : செப் 02, 2021
Share
Advertisement
புதுடில்லி:மஹாத்மா காந்தி படுகொலை தொடர்பாக, இதுவரை வெளிவராத உளவுத்துறை தகவல்கள், போலீஸ் ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புதிய புத்தகம், அக்., 1ல் வெளியாகிறது.மஹாத்மா காந்தி படுகொலை சம்பவம் குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், 'தி மர்டரர், தி மொனார்ச் அண்ட் தி பக்கிர்' என்ற தலைப்பில், புதிய புத்தகத்தை,'ஹார்பர் காலின்ஸ் இந்தியா'பதிப்பகம்,

புதுடில்லி:மஹாத்மா காந்தி படுகொலை தொடர்பாக, இதுவரை வெளிவராத உளவுத்துறை தகவல்கள், போலீஸ் ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புதிய புத்தகம், அக்., 1ல் வெளியாகிறது.

மஹாத்மா காந்தி படுகொலை சம்பவம் குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், 'தி மர்டரர், தி மொனார்ச் அண்ட் தி பக்கிர்' என்ற தலைப்பில், புதிய புத்தகத்தை,'ஹார்பர் காலின்ஸ் இந்தியா'பதிப்பகம், அடுத்த மாதம் 1ம் தேதி வெளியிடுகிறது.

புலனாய்வு பத்திரிகையாளர் அப்பு எஸ்தோஸ் சுரேஷ் மற்றும் பிரியங்கா கோட்டம்ராஜு ஆகியோர் இணைந்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது: காந்தி படுகொலைக்கான சூழல் எப்படி உருவானது என்பதை இந்த புத்தகம் மறு உருவாக்கம் செய்கிறது. அவர் சுடப்பட்டது வரையிலான சம்பவங்கள், அதன் பிறகான விசாரணை ஆகியவை குறித்து, வேறு கோணத்தில் இந்த புத்தகம் பேசுகிறது.

இதுவரை வெளிவராத உளவுத்துறை தகவல்கள், போலீஸ் விசாரணை ஆவணங்களின் அடிப்படையில் புலனாய்வு செய்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X