பொது செய்தி

தமிழ்நாடு

நாளை 5வது சுற்று சம்பள பேச்சு

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக, ஆறு ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள் - எட்டு தொழிற்சங்கங்கள் இடையே, ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ''90 சதவீத சம்பள உயர்வு; 15 ஆயிரத்துக்கு மேல் உயரும் ஒவ்வொரு விலைவாசி புள்ளிக்கும் 30 பைசா பஞ்சப்படி வழங்கவேண்டும்'' என்பது, தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கை. ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள்,

திருப்பூர் : திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக, ஆறு ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள் - எட்டு தொழிற்சங்கங்கள் இடையே, ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

''90 சதவீத சம்பள உயர்வு; 15 ஆயிரத்துக்கு மேல் உயரும் ஒவ்வொரு விலைவாசி புள்ளிக்கும் 30 பைசா பஞ்சப்படி வழங்கவேண்டும்'' என்பது, தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கை. ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள், கடந்த 27ம் தேதி நடந்த நான்காவது சுற்றில், 26 சதவீத உயர்வு வழங்க உடன்பட்டன.

ஆனால், தொழிற்சங்க தரப்பு, இதை ஏற்கவில்லை; கூடுதல் சம்பள உயர்வு வழங்கவேண்டும் என, வலியுறுத்துகின்றன.இதையடுத்து, ஐந்தாவது சுற்று சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை, நாளை(3ம் தேதி) மாலை, 5:30 மணிக்கு, ஹார்வி ரோட்டில் உள்ள 'சைமா' சங்க அரங்கில் நடைபெற உள்ளது. விரைவில் சம்பள ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்று தொழிலாளர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X