பொது செய்தி

இந்தியா

9 ஆண்டு வாழ்நாளை இழக்கும் இந்தியர்கள்

Added : செப் 02, 2021
Share
Advertisement
புதுடில்லி:காற்று மாசுபாடு காரணமாக, இந்தியர்களின் வாழ்நாள், சராசரியாக, ஒன்பது ஆண்டுகள் குறைவது, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின், சிகாகோ பல்கலையின் எரிசக்தி கொள்கை குழு, இந்தியாவில் காற்று மாசுபாடு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் காற்று மாசு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. காற்று மாசுபாட்டால்,

புதுடில்லி:காற்று மாசுபாடு காரணமாக, இந்தியர்களின் வாழ்நாள், சராசரியாக, ஒன்பது ஆண்டுகள் குறைவது, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின், சிகாகோ பல்கலையின் எரிசக்தி கொள்கை குழு, இந்தியாவில் காற்று மாசுபாடு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் காற்று மாசு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. காற்று மாசுபாட்டால், இந்தியர்களின் எதிர்பார்க்கப்படும் வாழ்நாள், சராசரியாக, ஒன்பது ஆண்டுகள் குறைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகர் டில்லி உட்பட, வடக்கு, கிழக்கு மத்திய இந்தியாவில் வசிக்கும், 48 கோடிக்கும் அதிகமானோர் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காற்று மாசு அதிகம் உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு, 2019ல் அறிமுகப்படுத்திய 'தேசிய துாய்மை காற்று' திட்டம் பலன் அளிக்கத் துவங்கிஉள்ளது.

இத்திட்டத்தில், 2024ம் ஆண்டுக்குள், 102 நகரங்களில் காற்று மாசுபாட்டை, 20 - 30 சதவீதம் வரை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனால், டில்லி மக்களின் வாழ்நாள், சராசரியாக, மூன்று ஆண்டுகள் ஒரு மாதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, தேசிய அளவில், ஒராண்டு, ஏழு மாதங்களாக காணப்படுகிறது.இவ்வாறு. அதில் கூறப்பட்டுள்ளது.

உலகில் காற்று மாசு அதிகமுள்ள தலைநகரங்களில், டில்லி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இடம் பெற்று வருகிறது. எனினும், கடந்த ஆண்டு, கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், டில்லியின், இரண்டு கோடி மக்கள் துாய்மையான காற்றை சுவாசிக்க வாய்ப்பு கிடைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X