பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் கிடைக்காமல் மாணவர்கள் அவதி

Added : செப் 02, 2021
Share
Advertisement
அன்னுார் : அரசு பள்ளிகள் நேற்று செயல்படத் துவங்கியும், கிராமங்களிலிருந்து, டவுன் பஸ்கள் இயக்கப்படாததால், மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர்.அன்னுார் வட்டாரத்தில், ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகளும், மூன்று அரசு உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளுக்கு 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவியர் அரசு டவுன் பஸ் மற்றும் சைக்கிள்களில் வருகின்றனர்.அன்னுார்
 பஸ் கிடைக்காமல் மாணவர்கள் அவதி

அன்னுார் : அரசு பள்ளிகள் நேற்று செயல்படத் துவங்கியும், கிராமங்களிலிருந்து, டவுன் பஸ்கள் இயக்கப்படாததால், மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர்.

அன்னுார் வட்டாரத்தில், ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகளும், மூன்று அரசு உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளுக்கு 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவியர் அரசு டவுன் பஸ் மற்றும் சைக்கிள்களில் வருகின்றனர்.அன்னுார் வடக்குப்பகுதிகளுக்கு இயக்கப்படும் ஏஆர்1/ ஏஆர்2 மற்றும் தனியார் பஸ்கள் பல மாதங்களாக இயங்குவதில்லை.

இதனால் செல்லனுார், கரியாக்கவுண்டனுார், வடக்கலுார், கணுவக்கரை, கள்ளிப்பாளையம், ஆம்போதி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மேல்நிலைப்பள்ளிக்கு, மூக்கனுார் அல்லது அன்னுார் அல்லது புளியம்பட்டிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பலர் பள்ளிக்கு செல்லவில்லை.இதேபோல், மேட்டுப்பாளையத்திலிருந்து காட்டம்பட்டி வழியாக, கணேசபுரத்திற்கு இயக்கப்பட்ட 20பி டவுன் பஸ் இயக்கப்படாததால், காட்டம்பட்டி பள்ளிக்கு செல்லும் பல மாணவ, மாணவியர், அவதிக்கு உள்ளாயினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X