எரிபொருள் விலை உயர்வு மோடி மீது ராகுல் தாக்கு

Added : செப் 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:கடந்த ஏழு ஆண்டுகளில், மத்திய அரசு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை உயர்த்தி, 23 லட்சம் கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக, காங்., - எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.ராகுல் அளித்த பேட்டி:மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு என்றால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது என்ற புதிய சித்தாந்தத்தை மத்திய அரசு பின்பற்றுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், மத்திய அரசு,

புதுடில்லி:கடந்த ஏழு ஆண்டுகளில், மத்திய அரசு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை உயர்த்தி, 23 லட்சம் கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக, காங்., - எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராகுல் அளித்த பேட்டி:மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு என்றால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது என்ற புதிய சித்தாந்தத்தை மத்திய அரசு பின்பற்றுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், மத்திய அரசு, பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தியதன் வாயிலாக, 23 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. இந்த பணம் எங்கே போனது என, மக்கள் கேட்கின்றனர்.

ஒரு புறம் பணத்தின் மதிப்பை இழக்கச் செய்து, மறுபுறம் பணத்தின் மதிப்பை உயர்த்தும் கொள்கையை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. இதன்படி, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், அமைப்பு சாரா துறையினர், குறு, சிறு, நடுத்தர தொழில்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஊதியதாரர்கள், நேர்மையான தொழிலதிபர்கள் ஆகியோரின் பணம் மதிப்பிழந்துள்ளது.

மறுபுறம், பிரதமர் மோடிக்கு நெருக்கமான நான்கு அல்லது ஐந்து நண்பர்களின் சொத்து மதிப்பு மிகப் பெரிய அளவில் உயர்ந்து வருகிறது.ஏழைகளிடம் உள்ள செல்வம், பணக்காரர்களுக்கு செல்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத பீதியில், பா.ஜ., அரசு, எரிபொருள் விலையை உயர்த்தி, ஆட்சி நடத்தி வருகிறது.

காங்., ஆட்சியில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 410 ரூபாயாக இருந்தது. இது தற்போது, 885 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், ஒரு லிட்டர் பெட்ரோல், 71 ரூபாயில் இருந்து 101 ரூபாயாகவும், டீசல், 57 ரூபாயில் இருந்து, 88 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
02-செப்-202112:24:37 IST Report Abuse
jayvee இது பரவாயில்லை.. எழுதிக்கொடுத்ததை பார்க்காமல் படிக்கும் திறமையுள்ள குழந்தை ராவுல் எவ்வ்லவோ மேல்
Rate this:
Cancel
02-செப்-202108:43:35 IST Report Abuse
Gopalakrishnan S காங்கிரஸ் ஆட்சியில் Oil Bond என்று கடன் வாங்கி, எண்ணெய் விலையை உயர்த்தாமல் கடன் சுமையை உயர்த்தி வந்தீர்கள். உலக மகா பொருளாதார நிபுணர்கள் ஆட்சியில் பட்ட கடனை இப்போது அடைக்க வேண்டிய அவசியம் இப்போது உள்ளது. இரண்டாவதாக, காங்கிரஸ் ஆட்சியில் அம்பானி அதானி ஆகியோர் சொத்து எவ்வளவு வளர்ச்சி அடைந்தது என தெரியுமா ? அவர்கள் அப்போது அன்றாடம் காய்ச்சிகளாய் இருந்து, இப்போதுதான் சொத்து சேர்த்துள்ளனரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X