பொது செய்தி

தமிழ்நாடு

வண்ண எழுத்தால் வடிவமைத்த கடிதம் 53 கி.மீ., நடந்து தாயிடம் வழங்கிய மகன்

Added : செப் 02, 2021
Share
Advertisement
காரைக்குடி:உலக கடித தினத்தை முன்னிட்டு, உலகத்தின் முதல் கடிதத்தை தமிழ்த்தாய் வடிவத்தில் எழுதி, 53 கி.மீ., நடந்து சென்று தாய்க்கு மகன் வழங்கினார்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் சின்ன பெருமாள், 53. இவர், 10ம் வகுப்பு படித்துள்ளார். பொது பிரச்னை உட்பட பல்வேறு பிரச்னைகளை வண்ண எழுத்துக்களாலும், வெவ்வேறு வடிவிலும் எழுதி, அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வு கண்டுள்ளார்.
 வண்ண எழுத்தால் வடிவமைத்த கடிதம் 53 கி.மீ., நடந்து தாயிடம் வழங்கிய மகன்

காரைக்குடி:உலக கடித தினத்தை முன்னிட்டு, உலகத்தின் முதல் கடிதத்தை தமிழ்த்தாய் வடிவத்தில் எழுதி, 53 கி.மீ., நடந்து சென்று தாய்க்கு மகன் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் சின்ன பெருமாள், 53. இவர், 10ம் வகுப்பு படித்துள்ளார். பொது பிரச்னை உட்பட பல்வேறு பிரச்னைகளை வண்ண எழுத்துக்களாலும், வெவ்வேறு வடிவிலும் எழுதி, அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வு கண்டுள்ளார். இந்நிலையில், உலக கடித தினமான செப்., 1ம் தேதியான நேற்று, தன் தாய் பானுமதிக்கு முதல் கடிதத்தை எழுத நினைத்தார்.

தமிழ்த்தாய் சிலை வடிவில், வண்ண எழுத்துக்களால் தாய்க்கு கடிதம் எழுதினார். காரைக்குடியில் இருந்து 53 கி.மீ., துாரத்தில் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள வாகைக்குடிக்கு நடந்தே சென்று, தாய் பானுமதியிடம் கடிதத்தை ஒப்படைத்தார்.

சின்னபெருமாள் கூறியதாவது:எனக்கு 9 வயது வரை பேச்சு வராது. எழுத்துக்களே என்னை வழிநடத்தின. பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உந்து சக்தியாக இருந்தனர். பிரதமர் தொடங்கி பலருக்கும் இதுவரை, 6,000 கடிதங்கள் எழுதியுள்ளேன்.செப்., 1ல் உலகின் முதல் கடிதம், பசுபிக் கடல் அருகே உள்ள டாங்கோ தீவில் எழுதப்படும்.

இந்தியாவில், ஆக., 31ம் தேதி மதியம் ஆகும்போதே டாங்கோ தீவில் செப்., 1 பிறந்து விடும். அந்த சாதனையை முறியடிக்கும் வகையில், முதல் கடிதத்தை எழுதி காரைக்குடியில் இருந்து, நேற்று முன்தினம் காலை 7:55 மணிக்கு புறப்பட்டு, 53 கி.மீ., துாரம் நடந்து மாலை 3:31 மணிக்கு என் தாயாரிடம் உலகின் முதல் கடிதத்தை வழங்கினேன்.இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X