பொது செய்தி

தமிழ்நாடு

'ஆம்னி பஸ்'கள் கட்டணம் உயர்வு?

Added : செப் 02, 2021
Share
Advertisement
சேலம்:''ஆம்னி பஸ்களின் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே பஸ்களை இயக்க முடியும்,'' என, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அப்சல் பர்வீன் தெரிவித்தார். சேலத்தில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள 3,000 'ஆம்னி பஸ்'களில், குளிர்சாதன வசதி இல்லாத 300 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன; 40 - 50 சதவீத இருக்கைகளே நிரம்புகின்றன.மீதமுள்ள குளிர்சாதன பஸ்களை இயக்க,

சேலம்:''ஆம்னி பஸ்களின் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே பஸ்களை இயக்க முடியும்,'' என, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அப்சல் பர்வீன் தெரிவித்தார்.

சேலத்தில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள 3,000 'ஆம்னி பஸ்'களில், குளிர்சாதன வசதி இல்லாத 300 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன; 40 - 50 சதவீத இருக்கைகளே நிரம்புகின்றன.மீதமுள்ள குளிர்சாதன பஸ்களை இயக்க, அரசு அனுமதி வழங்கவில்லை. வழங்கினாலும், இரண்டு ஆண்டுகள் பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், டயர் உள்ளிட்ட உதிரிபாகங்களை மாற்றி இயக்க, பஸ் ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும்.

டீசல், சுங்க கட்டணம், மூன்றாம் நபர் காப்பீடு தொகை உயர்வு ஆகியவற்றால் பழைய கட்டணத்தில் பஸ்களை இயக்கினால், தினமும் பஸ் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். தற்போதுள்ள நிலையில் 30 சதவீதம் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே, ஆம்னி பஸ்களை இயக்க முடியும். இதற்கு, மத்திய - மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X