சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தையை கொன்ற மகன் சொத்துக்காக பயங்கரம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
சங்கராபுரம்:சொத்துக்காக தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த விரியூர், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் ஆசிர்வாதம், 69; விவசாயி. மனைவி மரியாள், 62; மகன்கள் அந்தோணிராஜ், 46; ஜான் ஜோசப், 36. மூன்று மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். சொத்துக்களும் பிரித்து
 தந்தையை கொன்ற மகன் சொத்துக்காக பயங்கரம்

சங்கராபுரம்:சொத்துக்காக தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த விரியூர், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் ஆசிர்வாதம், 69; விவசாயி. மனைவி மரியாள், 62; மகன்கள் அந்தோணிராஜ், 46; ஜான் ஜோசப், 36. மூன்று மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். சொத்துக்களும் பிரித்து வழங்கப்பட்டு விட்டன.

ஆசிர்வாதம் பெயரில் 1 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தன் பெயருக்கு எழுதி வைக்கும் படி, ஜான் ஜோசப், தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, ஜான் ஜோசப் மீண்டும் தகராறு செய்தார்.ஆசிர்வாதம் மறுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கினர். ஆத்திரமடைந்த ஜான் ஜோசப், உருட்டு கட்டையால் ஆசிர்வாதத்தை சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.

ஆசிர்வாதத்தின் மூத்த மகன் அந்தோணிராஜ் புகாரின்படி, சங்கராபுரம் போலீசார் விசாரித்தனர்.தகராறில் காயமடைந்த ஜான் ஜோசப், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில், போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். சங்கராபுரம் போலீசார், ஜான் ஜோசப் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X